இறுதி சுற்றை நெருங்கியுள்ள பிக்பாஸ் அல்டிமேட்டில் தாமரைக்கு மிகவும் பிடித்த மல்லிகை பூவுடன் சுருதி வந்துள்ளார். 

பிக்பாஸ் அல்டிமேட் :

சிம்பு தொகுத்து வழங்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. 67 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இதில் தற்போது பாலா, நிரூப், ரம்யா பாண்டியன், ஜூலி, தமரைச் செல்வி, அபிராமி ஆகிய 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
பணப்பெட்டியுடன் சுருதி : 

இதில் கடந்த வாரம் பணப்பெட்டி ஒன்று பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டது. முதலில் ரூ.3 லட்சத்தில் தொடங்கிய பண மதிப்பு இறுதியில் ரூ.15 லட்சத்தில் வந்து நின்றது. அந்த பெட்டிக்காக கடுமையான போட்டிகள் நடந்தன. இதில் சுருதி, ஜூலி இருவர்படும் போட்டியிட்டனர். சேற்றில் உருண்டு புரண்டு போட்ட போட்டியில் சுருதி வெற்றி பெற்று பணப்பெட்டியை கைப்பற்றி வெளியில் சென்றார்.

இதையும் படியுங்கள்...Andrea Jeremiah : சைட் கிளாமரில் ஆண்ட்ரியா..அங்க அழகை அங்கங்கே காட்டி இளசுகளை வாட்டும் கவர்ச்சி போஸ்..

மீண்டும் பணப்பெட்டி :

பின்னர் வெளியில் சென்ற சுருதியுடன் போட்டியாளர்களை சந்தித்த சிம்பு மீண்டும் ஒரு பணப்பெட்டியை காட்டி இதில் 25 லட்சம் பணம் வைக்கப்பட்டுள்ளதகவும். இதை பெற பல்வேறு டாஸ்குகள் கொடுக்கப்படும் என்று அதிர்ச்சி கொடுத்தார்.இதையடுத்து டாஸ்குகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.

ரம்யா பாண்டியனுக்கு கால் முறிவு : 

தற்போது வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் உள்ளே வந்துள்ளார் ரம்யா பாண்டியன். முன்னதாக கேபிஒய் சதீஸ், தீனா, சாண்டி உள்ளிட்டோர் பாதியில் வந்தனர். இதில் ரம்யா பாண்டியன் மட்டுமே இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார். சமீபத்தில் நடந்த டாஸ்கின் போது ரம்யா பாண்டியனுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இருந்தும் தாக்குப்பிடித்து அல்டிமேட் வீட்டில் உள்ளார் ரம்யா.

இதையும் படியுங்கள்...1000 கோடி வசூல்...பிரபலங்களுடன் வெற்றி கொண்டாட்டத்தில் RRR டீம்..

சுருதி ரீஎன்ட்ரி :

இறுதி சுற்றை நெருங்குவதால் எலிமினேட் ஆனா போட்டியாளர்கள் மீண்டும் கெஸ்ட்டாக வந்து கொண்டிருக்கின்றனர். அதன்படி அபிநய், அனிதா, தாடி பாலாஜி உள்ளிட்டோர் வந்துள்ளனர். அந்த வகையில் தற்போது சுருதியும் வந்துள்ளார். அவர் தாமரைக்கு மிகவும் பிடித்த மல்லிகை பூவுடன் வந்துள்ளார்.

View post on Instagram