பல்வேறு தடைகளை கடந்து சாதித்த ஜெய் பீம் படத்துக்கு உலகெங்கிலும் இருந்து விருதுகளும், அங்கீகாரமும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன.

உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது உண்டு. அந்த வகையில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம் மொழி, இனம், கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

இந்த திரைப்படம் 1990களில் நடந்த உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மீது செய்யாத தவறுக்காக காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை தோலுரிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. இதில் பாதிக்கப்பட்ட செங்கேணிக்கு (பார்வதி அம்மாள்) நீதி கிடைக்க சட்ட ரீதியாக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா திறம்பட நடித்திருந்தார். 

பல்வேறு தடைகளை கடந்து சாதித்த ஜெய் பீம் படத்துக்கு உலகெங்கிலும் இருந்து விருதுகளும், அங்கீகாரமும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. அதன்படி சிறந்த படம், சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக லிஜோமோல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.