நடிகர் சூர்யா - இறுதிச்சுற்று பட புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய திரைப்படம் கொரோனா பிரச்சனை காரணமாக தடைபட்டிருந்தது. இதனால் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெலியாகின. ஆனால் இதை மறுத்த படக்குழு நிச்சயம் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வோம் என உறுதி அளித்தது. 

ஆனால் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த சூர்யா, சுதா கெங்கராவின் பல ஆண்டு உழைப்பு மற்றும் தொழில்நுட்ப குழுவின் முயற்சியை வீணாடிக்க கூடாது என்பதற்காகவும், தரமான படைப்பை சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது தயாரிப்பாளரின் கடமை என்பதாலும், சூரரைப்போற்று திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்தார். அதன்படி, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30ம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

 

இதையும் படிங்க:  இன்று சிவகார்த்திகேயன் வீட்டில் விசேஷமான நாளாம்... நீங்கள் பார்த்திடாத புகைப்படங்களுடன் அசத்தல் தகவல்கள் !

 மேலும் சூரரைப் போற்று வெளியிட்டு தொகையில் இருந்து 5 கோடி ரூபாயை பகிர்ந்தளிக்க உள்ளதாகவும்,  பொதுமக்களுக்கும்‌, திரையுலகை சார்ந்தவர்களுக்கும்‌, தன்னலம்‌ பாராமல்‌ கொரோனா யுத்த களத்தில்‌ முன்னின்று பணியாற்றியவர்களுக்கும்‌, இந்த ஐந்துகோடி ரூபாய்‌ பகிர்ந்தளிக்கப்படும்‌ என்றும் தெரிவித்திருந்தார். 

 

இதையும் படிங்க: அனிகாவின் ஓணம் ஸ்பெஷல் ட்ரீட்... யாருமே எதிர்பார்க்காத லுக்கில் அதிரடி காட்டும் போட்டோஸ்...!

அதன்படி, இன்று முதற்கட்டமாக ரூ.1.5 கோடிக்கான தொகை திரையுலகினருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. திரைத்துறை தொழிலாளர்களின் அமைப்பான பெப்ஸிக்கு ரூ.80 லட்சம் ரூபாயும், இயக்குநர்கள் சங்கத்திற்கு ரூ.20 லட்சம் ரூபாயும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ரூ.30 லட்சமும், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.20 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலைகளை இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் நாசர் ஆகியோரிடம் சூர்யாவின் தந்தை சிவக்குமார் வழங்கினார்.