தென்னிந்திய நடிகர்கள் அனைவரும் தங்களது முழு திறமையும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். சொல்லப்போனால் பாலிவுட் சினிமாவை கூட எங்களால் திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என சூர்யா கூறியுள்ளார்.
ரியல் ஹீரோ சூர்யா :
தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் சூரியா..மற்ற முன்னணி நடிகர்கள் போலவே சூர்யாவும் முதலில் காதல் மன்னனாகவே வலம் வந்தார். நந்தா என்னும் மாறுபட்ட நடிப்பின் மூலம் புதிய வைத்தாராம் எடுத்த சூர்யா..ஆறு, காக்க காக்க, ஆயுத எழுத்து உள்ளிட்ட ஆக்ஷன் படங்களை கொடுத்தார்.
சிங்கம் சீரிஸ் :
சூர்யாவின் தொடர் வெற்றி காரணமாக ஹரி கூட்டணி அமைய சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3 என அடுத்தடுத்து ஆக்ஷன் படங்களை கொடுத்து ரசிகர்ளை குஷிப்படுத்தியிருந்தார். இதையடுத்து சிங்கம் 4 வரும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் யானை படம் சூர்யாவுக்காக உருவாக்கப்படும் என ஹரி தெரிவிக்க அந்த கூட்டணியில் திடீர் பிளவு ஏற்பட்டது.
மேலும் செய்திகளுக்கு... Etharkkum Thunindhavan : திரையரங்குகளில் மக்களால் கொண்டாடப்படும் எதற்கும் துணிந்தவன் - காரணம் என்ன?

தொடர் ஓடிடி வெளியீடு :
இவரது சமீபத்திய சாதனையாக சுதா கொங்கராவ் இயக்கத்தில் சூரரை போற்று படம் மிகப்பெரியாய் வெற்றியையும், பல விருதுகளையும் குவித்தது. இதையடுத்து ஜெய் பீம் ..இருளர்களின் வாழ்க்கையையும், லாக்கப் டெத் குறித்தும் விவரிக்கப்பட்டிருந்தது. இந்த படம் உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு படங்களும் ஓடிடியில் வெளியானது.
மேலும் செய்திகளுக்கு... Etharkkum Thunindhavan : திரையரங்குகளில் மக்களால் கொண்டாடப்படும் எதற்கும் துணிந்தவன் - காரணம் என்ன?
இரண்டு வருடம் கழித்து திரையில் சூர்யா :
தற்போது ஹிட் படங்களை இயக்கிய பாண்டிராஜ், சூர்யாவின் துணிந்தவன் படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கில் கேங் லீடர், தமிழில் டாக்டர் என வரிசையாக ஹிட் படங்களில் நடித்த பிரியங்கா மோகன் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் இரண்டரை வருடம் கழித்து திரையரங்கில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த படம் 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.

பாலிவுட் சென்று நிரூபிக்க தேவையில்லை :
இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தை புரோமோஷன் செய்வதற்காக சூர்யா கேரளா சென்றுள்ளார். அங்கு பத்திரிக்கையாளர்கள் பாலிவுட் செல்வீர்களா என கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த சூர்யா... பாலிவுட் சென்றால்தான் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தென்னிந்திய நடிகர்கள் அனைவரும் தங்களது முழு திறமையும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.
சொல்லப்போனால் பாலிவுட் சினிமாவை கூட எங்களால் திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என சூர்யா கூறியுள்ளார். இறுதியாக பாலிவுட் வாய்ப்பு வந்தால் ஏற்க தயார் என்றும் கூறியுள்ளார்.
