Etharkkum Thunindhavan : சூர்யா நடித்த கடந்த இரண்டு படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகின. இதன்காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக சூர்யாவை திரையில் காண முடியாமல் தவித்த ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமைந்துள்ளது.
சூரரைப்போற்று, ஜெய்பீம் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து, சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள படம் எதற்கும் துணிந்தவன். பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கிய பாண்டிராஜ், இப்படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் கேங் லீடர், தமிழில் டாக்டர் என வரிசையாக ஹிட் படங்களில் நடித்த பிரியங்கா மோகன் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை.

இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதற்கான காரணங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். எதற்கும் துணிந்தவன் படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் இப்படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது தான்.
ஏனெனில் சூர்யா நடித்த கடந்த இரண்டு படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகின. இதன்காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக சூர்யாவை திரையில் காண முடியாமல் தவித்த ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமைந்துள்ளது.

இதுதவிர நடிகர் சூர்யா நீண்ட இடைவெளிக்கு பின்னர் இப்படத்தில் கமர்ஷியல் ஹீரோவாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது அமைந்துள்ளதால், திரையரங்குகளில் குடும்பம் குடும்பமாக வந்து இப்படத்தை மக்கள் பார்த்து செல்கின்றனர்.
சூர்யாவுக்கு இப்படம் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளது. இதற்கு முன் வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியை ருசித்த நிலையில், அந்த லிஸ்டில் தற்போது எதற்கும் துணிந்தவன் படமும் இணைந்துள்ளது.
இதையும் படியுங்கள்... Etharkkum Thunindhavan review : சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பாஸா? பெயிலா? - முழு விமர்சனம் இதோ
