தமிழ் சினிமாவில் ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள திரைப்படம் “சூரரைப் போற்று”. இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கி ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட், சிக்யா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த திரைப்படம் கொரோனா பிரச்சனை மட்டும் இல்லை என்ற கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. அதனால் வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. ஓடிடி ரிலீஸ் என்றாலும் படம் மொத்தம் 100 கோடிக்கு பிசினஸ் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

இதையும் படிங்க:  அஜித்துடன் ‘ரெட்’ படத்தில் நடித்த நடிகையா இது?... 43 வயதிலும் சும்மா நச்சுன்னு இருக்கும் போட்டோ...

இந்நிலையில். இந்திய விமானப்படையின் தடையில்லா சான்றிதழ் பெற முடியாததால் சூரரைப்போற்று படம் சொன்ன தேதியில் வெளியாவதில் சிக்கல் உருவானது. இதை நடிகர் சூர்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். 

இந்நிலையில் நேற்று முன் தினம் தடையில்லா சான்றிதழ் கிடைத்துவிட்டதாக நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.மேலும் புதிய ரிலீஸ் தேதி குறித்து படக்குழு ஆலோசித்து வந்த நிலையில், படம் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. இதனால் சொன்ன தேதிக்கு சூர்யா ரசிகர்கள் சூரரைப் போற்று படத்தை காண முடியாமல் வாடிக்கொண்டிருந்தனர். அதனால் அவர்களை குஷிப்படுத்தும் விதமாக டிரெய்லர் ரிலீஸ் குறித்த சூப்பர் தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: சன் டி.வி. ரசிகர்களுக்கு அதிர்ச்சி... விரைவில் நிறுத்தப்படுகிறது பிரபல சீரியல்...!

சூரரைப் போற்று பட டிரெய்லர் ரிலீஸ் குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இவ்வளவு நாட்களாக தனது டீம் மற்றும் படத்திற்கு ஆதரவாக இருந்ததற்கு நன்றி தெரிவித்துள்ள சூர்யா, நாளை காலை 10 மணிக்கு டிரெய்லர் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ...