மீண்டும் சூர்யாவை திரையில் காண காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று அவரே ஒரு அதிர்ச்சியான செய்தியையும் வெளியிட்டார். 

சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் மாஸ் வெற்றியடைந்தது. ஓடிடியில் வெளியான படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? என அனைவரும் வியக்கும் வண்ணம் படத்தின் வியூஸ்கள் சாதனை படைத்தது. சூரரைப் போற்று படத்திற்கு பிறகு வெற்றிமாறன் - சூர்யா முதன் முறையாக இணைய உள்ள வாடிவாசல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' நாவலை வைத்தே, 'வாடிவாசல்' படம் உருவாகவுள்ளது. கலைப்புலி தாணு தாயாரிக்க உள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 23ம் தேதி அன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைக் கூட படக்குழு வெளியிட்டது. இடையில் படம் கைவிடப்பட்டதாக கூட தகவல்கள் கசிய, தயாரிப்பாளர் தாணு இதுமுற்றிலும் வதந்தி என விளக்கமளித்திருந்தார். 

மீண்டும் சூர்யாவை திரையில் காண காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று அவரே ஒரு அதிர்ச்சியான செய்தியையும் வெளியிட்டார். அதில் கொரோனா தொற்றிலிருந்து பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் நலமுடன் இருக்கிறேன் எனக்கூறியிருந்தார். அவர் நன்றாக இருப்பதாக சொன்னாலும் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. வருத்தத்தில் இருக்கும் சூர்யா ரசிகர்களை குஷியாக்கும் விதமாக வாடிவாசல் படம் குறித்த அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. 

தற்போது சூரி, விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கி வரும் வெற்றிமாறன், வரும் ஜூலை மாதம் முதல் வாடி வாசல் படப்பிடிப்பை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளாராம். அதேபோல் ஏப்ரல் மாதம் படத்தை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.