நடிகர் சூர்யாவின் 45வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இப்படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் இணையத்தில் கசிந்துள்ளது.

Suriya 45 Title Teaser Update : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த ரெட்ரோ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பெரியளவில் வசூலிக்கவில்லை. இதனால் அவரின் கம்பேக்குக்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். அந்த வகையில் அவர் நடிப்பில் தற்போது சூர்யா 45 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சூர்யா 45 படத்தில் ஹீரோயினாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தில் சூர்யா உடன் லப்பர் பந்து பட நடிகை சுவாசிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுதவிர இப்படத்தை இயக்கும் ஆர்.ஜே.பாலாஜியும் இப்படத்தில் வக்கீலாக நடித்து வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூர்யா 45 பட டைட்டில் என்ன?

இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதன் ஒரிஜினல் டைட்டிலை வருகிற ஜுன் 20ந் தேதி படக்குழு வெளியிட திட்டமிட்டு உள்ளது. அன்றைய தினம் இப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்தநாள் என்பதால் அதை ஒட்டி சூர்யா 45 படத்தின் டைட்டில் டீசரை வெளியிட முடிவு செய்துள்ளனர். அதற்குள் இப்படத்தின் டைட்டில் பற்றிய பேச்சுகள் சோசியல் மீடியாவில் உலா வருகின்றன. அதன்படி இரண்டு டைட்டில்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

அதில் ஒன்று வேட்டை கருப்பு மற்றொன்று பேட்டைக்காரன். இந்த இரண்டு டைட்டில்களில் ஏதேனும் ஒன்று தான் சூர்யா 45 படத்தின் டைட்டிலாக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு முன்னர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை போல் சூர்யா 45 திரைப்படமும் வெற்றிபெற்று நடிகர் சூர்யாவுக்கு தரமான கம்பேக் படமாக அமையும் என ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த வருட தீபாவளிக்கு இப்படம் விருந்தாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.