சூர்யா 45 படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி ஆகும் ‘ஆலப்புழா ஜிம்கானா’ நாயகி
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 45 திரைப்படத்தில் ஆலப்புழா ஜிம்கானா படத்தின் நாயகி லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார்.

Anagha Ravi joins hands with Suriya - 'Suriya 45' new alliance : சூர்யாவின் அடுத்த படம் சூர்யா 45. எனவே சூர்யா ரசிகர்கள் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தில் சூர்யா வக்கீலாக நடிக்கிறார். அதே நேரத்தில் கிராமத்து பின்னணியில் கதை நடக்கிறது என்றும் கூறப்படுகிறது. சூர்யா படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பார் என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால் ரகுமான் படத்தின் ஷூட்டிங் தொடங்கிய பிறகு விலகினார். அவருக்கு பதில் சாய் அபயங்கர் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
Sai Abhyankkar
சூர்யா 45 பட அப்டேட்
சோஷியல் மீடியாவில் வைரலான ஆசா குட, கச்சி சேரா போன்ற பாடல்கள் மூலம் சாய் அபயங்கர் பிரபலமானார். இந்த பாடல்களை எழுதி இசை அமைத்து பாடியது சாய் தான். பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி ஜோடியின் மகன் தான் சாய். டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சூர்யா 45 படத்தை தயாரிக்கிறது. அதே நேரத்தில் ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். அட்லீ இயக்கிய படங்களுக்கு கேமராமேனாக இருந்த விஷ்ணு முதல் முறையாக சூர்யா படத்தில் பணியாற்றுகிறார்.
இதையும் படியுங்கள்... Suriya 45: 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆர் ஜே பாலாஜி படத்துக்காக; பழைய ஃபார்முக்கு திரும்பிய சூர்யா!
Suriya, Trisha
மீண்டும் சூர்யா - திரிஷா ஜோடி
சூர்யா 45 திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் ஆர்.ஜே.பாலாஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் லேட்டஸ்டாக மலையாள நடிகை ஒருவர் இணைந்திருக்கிறார். ஏற்கனவே மலையாள நடிகை ஸ்வாசிகா இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது சென்சேஷனல் ஹிட் படத்தின் நாயகியும் அதில் நடித்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.
Anagha Ravi
சூர்யா 45ல் இணைந்த அனகா ரவி
அந்த நடிகை வேறுயாருமில்லை, மலையாளத்தில் லேட்டஸ்டாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் ஆலப்புழா ஜிம்கானா திரைப்படத்தின் நாயகி அனகா ரவி தான் தற்போது சூர்யா 45 படத்தில் இணைந்துள்ளார். இவர் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்துள்ளார். மலையாள நடிகைகளுக்கு தமிழ்நாட்டில் எப்பவுமே மவுசு உண்டு, அதேபோல் சூர்யா 45 படத்துக்கு பின்னர் அனகா ரவியும் கோலிவுட்டில் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... சூர்யா 45 படத்துக்காக ஆர்.ஜே.பாலாஜி பொத்தி பொத்தி பாதுகாத்த டைட்டில் லீக் ஆனது!