Asianet News TamilAsianet News Tamil

பொம்பள ஜாக்கி சானா இருப்பாங்க போல... ‘சூர்யா 42’ பட ஹீரோயினின் மிரள வைக்கும் ஸ்டண்ட் வீடியோ வைரல்

சூர்யா 42 படத்தில் ஹீரோயினாக நடிக்கும் பாலிவுட் நடிகை திஷா பதானி அதிரடியாக சண்டைப் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Suriya 42 movie heroine Disha Patani Stunt video viral
Author
First Published Feb 8, 2023, 3:00 PM IST

சூர்யா தற்போது தனது 42-வது படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். தற்காலிகமாக சூர்யா 42 என அழைக்கப்படும் இப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பை கோவாவில் நடத்திய படக்குழு, பின்னர் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கை நடத்தியது. இதற்கு அடுத்தபடியாக அப்படத்தில் இடம்பெறும் வரலாற்று பகுதிகளை படமாக்க பிஜி தீவிற்கு சென்றுள்ளனர். அங்கு பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.

இதையும் படியுங்கள்... ஒரே பதிவு... ஒட்டுமொத்த வதந்தியும் குளோஸ்! மீண்டும் லியோ படப்பிடிப்பில் திரிஷா - வைரலாகும் போட்டோ

இந்நிலையில், சூர்யா 42 படத்தில் ஹீரோயினாக நடிக்கும் பாலிவுட் நடிகை திஷா பதானியின் ஸ்டண்ட் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டித்தீ போல் பரவி வருகிறது. நின்ற இடத்திலேயே சுழன்று, சுவற்றில் மிதித்து ஜாக்கி சான் போல் மின்னல் வேகத்தில் பறந்து பறந்து அவர் சண்டைபயிற்சி மேற்கொள்ளும் வீடியோ காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இதைப்பர்த்து வியந்து போன நெட்டிசன்கள் சூர்யா 42 படத்தில் தரமான சம்பவம் இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருசிலரோ திஷா பதானியை பொம்பள ஜாக்கிசான் என வர்ணித்து வருகின்றனர். இந்த வீடியோவை பார்த்து வியந்துபோன நடிகை சமந்தா வெறித்தனமாக இருப்பதாக பாராட்டி உள்ளார். இதன்மூலம் சூர்யா 42 படத்தில் திஷா பதானி ஆக்‌ஷன் ஹீரோயினாக மிரட்டி வருகிறார் என்பது தெரிகிறது.

இதையும் படியுங்கள்... மோசடி மன்னனின் காதல் வலையில் சிக்கி கர்ப்பமான பிரபல நடிகை..? கருக்கலைப்பு செய்ததாக பரவும் பகீர் தகவல்

Follow Us:
Download App:
  • android
  • ios