பாலாவின் 56 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 2டி தயாரிக்கும் இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. இதில் வணங்கான் என டைட்டிலும், சூர்யாவின் நியூ லுக்கும் வெளியாகியுள்ளது.
ஜெய் பீம் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா பாண்டியராஜன் இயக்கத்தில் "எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். கிராமத்து நாயகனாக வந்து அசத்தியிருந்த சூர்யாவின் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.சமீபத்திய பெண்கள் சமூக விரோதிகள் மூலம் படும் இன்னல்களை இந்த படத்தில் மூலம் தோலுரித்துக் காட்டி இருந்தார் இயக்குனர். பின்னரே விக்ரமின் சூர்யா 10 நிமிடம் வந்திருந்தாலும் சிறந்த சம்பவமாக அமைந்து ரசிகர்களின் பேராதரவையும், பிரபலங்களின் வாழ்த்துக்களையும் வாங்கிக் கொண்டார்.

இந்த படத்தை தொடர்ந்து வாடிவாசல் படத்தில் இவர் நடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதோடு இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருவா படத்திலும் இணைவார் என கூறப்பட்டது. ஆனால் புதியதாக பாலா உடன் கைகோர்த்தார் சூர்யா. இதனால் வாடிவாசல் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாக. அதனை பொய்யாக்கும் விதத்தில் ஜல்லிக்கட்டு களம் சென்னைக்கு அருகே மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு அங்கு முதற்கட்ட போட்டோ ஷூட் எடுக்கப்பட்டது.

இதையடுத்து சூர்யா 41 என தற்காலிகமாக பேரிடப்பட்டுள்ள பாலாவின் படத்தில் நடித்த வருகிறார் சூர்யா. கன்னியாகுமரி ராமேஸ்வரம் உள்ளிட்ட கடற்கரை சார்ந்த பகுதிகளில் இந்த படம் படமாக்கப்பட்டு வருகிறது சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவனின் கதையாக இந்த படம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக படம் பாதியில் நிறுத்தப்பட்டதாக தகவல் பரவியது. ஆனால் அதை உடைக்கும் விதமாக ரயிலில் பாலாவும் சூர்யாவும் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை நாயகன் வெளியிட்டு இருந்தார். அதில் சூர்யா வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டார். அதோடு மாதவனின் ராக்கெடரியில் சிறப்பு தோற்றத்தில் வந்த சூர்யா இந்தியில் உருவாக்கி வரும் சூரரை போற்று படத்திலும் காமியோவாக நடிக்கிறார். இந்த படத்தை சுதா கொங்காரா இயக்க சூர்யாவின் 2 டி தயாரிக்கிறது.

முன்னதாக நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் பாலாவுடன் இணைந்திருந்தார் சூர்யா. இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை கண்டது. இதனால் சூர்யாவின் 41வது படம் குறித்த எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எழுந்து விட்டது. இந்த படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.இந்த படத்தில் கிருத்தி ஷெட்டி நாயகியாவும், ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தமாகியுள்ளனர். பாலாவின் 56 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 2டி தயாரிக்கும் இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. இதில் வணங்கான் என டைட்டிலும், சூர்யாவின் நியூ லுக்கும் வெளியாகியுள்ளது.
