நான் சிறப்பாக நடனம் ஆடியிருப்பதாக சொன்னார்கள். ஆனால், என்னைவிடவும் சூரி தான் ரொம்ப நல்லா டான்ஸ் ஆடினார் என்று நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.

தளபதி பிரபு இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், சூரி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ள படம் “பொதுவாக எம்மனசு தங்கம்”. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் குறித்து நிவேதா பெத்துராஜ் கூறியது: “ஒரு நாள் கூத்து படத்திற்குப் பிறகு இப்படத்தில் நான் நடித்துள்ளேன். இதில் கொஞ்சம் வித்தியாசமாக கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளேன்.

சிங்கக்குட்டி பாடலில் நான் சிறப்பாக ஆடியிருப்பதாக சொல்கிறார்கள். படத்தில் என்னை ரொம்பவும் கவர்ந்தவர் காமெடி நடிகர் சூரி.

நாங்கள் டான்ஸ் பிராக்டிஸ் பண்ணிக் கொண்டிருக்கும்போது, எதையும் கண்டுகொள்ளாமல் சர்வ சாதாரணமாக இருப்பார். ஆனால், படப்பிடிப்பின் போது டான்ஸ் ரொம்ப நன்றாக ஆடி எல்லோரது பாராட்டையும் பெற்றுவிடுவார்.

கேமராமேன் பாலசுப்ரமணியம் என்னை படத்தில் நன்றாக காட்டியிருக்கிறார். பார்த்திபன் சார் ஓயாமல் பேசிக் கொண்டேயிருப்பார். அப்படியிருந்தாலும் நான் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்” என்றுத் தெரிவித்துள்ளார்.