Suresh Kamatchi complained to the Police Commissioner of Chennai.
விஷாலின் தூண்டுதலின் பேரில் அவரது ரசிகர்கள் அவதூறாக தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான நடிகர் விஷால் குறித்து தொடர்ச்சியாக சினிமா துறையினர் பலரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகின்றனர்.
நடிகர் சங்க தலைவராக இருந்த சரத்குமார் நடிகர் விஷால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்து வந்தார். ஆனால் நடிகர் சங்க தேர்தலின்போது சரத்குமார் தோற்கடிக்கப்பட்டார்.
இதையடுத்து விஷால் நடிகர் சங்கத்தில் பதவியை பிடித்தார். பின்னர் தயாரிப்பாளர் சங்கத்திலும் பதவியை பிடித்தார்.
இதைதொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தலிலும் பதவிக்காக போட்டியிட முற்பட்டார். இதனால் கலக்கமான திரையுலகினர் விஷாலுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினார். ஆர்.கே.நகர் தேர்தலின்போது நடிகர் சேரன் விஷாலை கடுமையாக எதித்தார்.

இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதியன்று 'சிவா மனசுல புஷ்பா' என்னும் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, விஜய் என்ற ஒரு நடிகர் அனிதா இறந்ததும் எந்த ஒரு பப்ளிசிட்டியும் இல்லாம ஊர்ல போய் நின்னாரே, எத்தனை கோடி கொடுத்தாலும் அதற்கு ஈடாகாது எனவும் ஆனால் விஷால், 2ஆயிரம் ரூபாய்க்கு நோட்டு, புத்தகம் கொடுத்து விட்டு ஊர் முழுவதும் பப்ளிசிட்டி பண்ணுவதாகவும் விமர்சித்தார்.
மேலும், விஷாலை விரைவில் தமிழ்நாட்டை விட்டு தூக்குவதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், விஷாலின் தூண்டுதலின் பேரில் அவரது ரசிகர்கள் அவதூறு மற்றும் தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
