suresh kamatchi about iruttu araiyil muratu kuthu movie

உயிர்கொடு காவிரி’ என்கிற வீடியோ ஆல்பம் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய இயக்குனரும், தயாரிப்பாளருமான சுரேஷ் காமட்சி பேசுகையில்... 

 “சமீபத்தில் காவிரிக்காக போராட்டம் நடத்தினோம், எல்லோரும் காவிரிக்காக எதற்கு ஐ.பி.எல்லை நிறுத்த சொல்கிறீர்கள் என கேட்கிறார்கள். நடிகை ஸ்ரீபிரியா.... சேப்பாக்கம் மைதானத்தின் முன்பாக போராட்டம் நடத்தியதற்கு பதிலாக தலைமை செயலகம் முன்பு நடத்தியிருக்கலாமே என்கிறார். எங்கே போராட்டம் நடத்தினால் கவனம் ஈர்க்கப்படுமோ அங்கேதான் போராட வேண்டும்.

உங்களிடம் ஆட்கள் இருக்கிறார்களே. நீங்கள் சென்று போராட்டம் நடத்தி இருக்கலாமே.... நாங்கள் தடுக்கவில்லையே... இதில் நாங்கள் காசுக்காக போராடுகிறோம் என சமீபகாலமாக குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளார்கள்.

இப்படி தாங்கள் நடத்தும் போராட்டங்களை விமர்சித்து பதிவிடுபவர்கள் யாரென பார்த்தால், மூத்த நடிகர்களின் மூத்த ரசிகர்கள் தான். அவர்களுடைய உச்சகட்ட போராட்டமே 120 ரூபாய் டிக்கெட்டை 1500 ரூபாய் கொடுத்து வாங்கி பார்ப்பதுதான். அதை தவிர வேறு போராட்டத்தை அவர்கள் பார்த்திருக்கமாட்டார்கள். இவ்வளவு பாலங்கள், நான்கு வழி சாலைகள் அமைக்கும் அரசாங்கம் ஏன் அணைகள் மட்டும் கட்ட முன்வரவேயில்லை..? 5௦ வருஷமாக கர்நாடகாவுடன் போராடியதற்கு பதிலாக பத்து அணைகள் கட்டியிருக்கலாம். மற்ற மாநிலங்களில் மணல் அள்ளி விற்க தடை போட்டு விட்டு இறக்குமதி செய்கிறார்கள்.. ஆனால் இங்கே நம் தமிழ்நாட்டில் தான் மணலை இறக்குமதி செய்யக்கூடாது என கூறி மணல் அள்ள அனுமதித்துள்ளார்கள் என்பது விசித்திரம். 

நீட் தேர்வுக்கு எதிராக பாரதிராஜா குரல் கொடுத்தால், உடனே ஏன் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்திற்கு எதிராக இவர் குரல் கொடுக்கவில்லை என்கிறார்கள். அதுவா பாராதிராஜாவின் வேலை..? தயவுசெய்து போராடுபவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். இல்லையென்றால் நீங்கள் வந்து போராடுங்கள். உங்களுக்காகவும் தான் போராடுகிறோம் என்பதை மனதில் கொள்ளுங்கள். பிரச்சனைகளை பேசுவதை விட தீர்வுகளை பற்றி பேசுவோம். இப்போது நாம் போராடவேண்டியது ஏன் அணைகட்டவில்லை என மாநில அரசை எதிர்த்துத்தான்” என உணர்ச்சி பொங்க பேசினார்.