Asianet News TamilAsianet News Tamil

சுப்ரீம் ஸ்டாருடன் நேருக்கு நேர் மோதிய கேப்டனின் 19 படங்கள்.. ஜெயித்தது யார் தெரியுமா? சுவாரசிய தகவல்கள் இதோ!

Vijayakanth Vs Sarathkumar : மறைந்த பிரபல நடிகர் கேப்டன் விஜயகாந்த் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 19 படங்களில் ஒரே நாளில் வெளியாகி நேருக்கு நேரு மோதியுள்ளன, அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Supreme Star Sarathkumar and Captain Vijayakanth movies one on one guess who wins ans
Author
First Published Apr 11, 2024, 7:51 PM IST

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திரைப்படங்களுக்கு என்று எப்பொழுதுமே ஒரு தனி மவுசு உண்டு. அதேபோலத்தான் சுப்ரீம் ஸ்டாராக தமிழ் திரையுலகில் வலம் வரும் சரத்குமார் அவர்களுடைய திரைப்படங்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிலையில் இவர்கள் இருவருடைய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளது. அதில் யார் அதிக படங்களில் ஜெயித்து வெற்றி கண்டார் என்பதை குறித்து இப்பொழுது பார்க்கலாம். 

கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் "உள்ளத்தில் நல்ல உள்ளம்" மற்றும் சரத்குமாரின் "கண் சிமிட்டும் நேரம்" ஆகிய இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியானது, இதில் அதிக வசூலை பெற்றது விஜயகாந்தின் "உள்ளத்தில் நல்ல உள்ளம்" என்கின்ற திரைப்படம் தான். 1990 ஆம் ஆண்டு விஜயகாந்தின் "புதுப்பாடகன்" என்கின்ற திரைப்படமும், சரத்குமாரின் "சீதா" என்கின்ற படம் ஒரே நேரத்தில் ரிலீசானது, இதிலும் கேப்டன் விஜயகாந்த் தான் வின்னர். 

சொத்தை பிரிக்க முடிவெடுத்த அபிராமி... அபேஸ் பண்ண காத்திருக்கும் ரியா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

அதை 1990 ஆம் ஆண்டு விஜயகாந்தின் "எங்கிட்ட மோதாதே" என்கின்ற திரைப்படமும், சரத்குமாரின் "பாலைவன பறவைகள்" திரைப்படம் ரிலீஸ் ஆனது, இதிலும் வெற்றி கண்டது விஜயகாந்த் அவர்களே. அதேபோல 1990 ஆம் ஆண்டு விஜயகாந்தின் "சத்ரியன்" திரைப்படமும் சரத்குமாரின் "சிறையில் சில ராகங்கள்" திரைப்படம் வெளியாகி மீண்டும் விஜயகாந் வெற்றி பெற்றார். 

அதேபோல 1992 ஆம் ஆண்டு விஜயகாந்தின் "சின்ன கவுண்டர்" மற்றும் சரத்குமாரின் "இளவரசன்" ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி, "சின்ன கவுண்டர்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. 1992 ஆம் ஆண்டு சரத்குமாரின் "தாய்மொழி" மற்றும் விஜயகாந்தின் "காவியத் தலைவன்" படம் ரிலீஸ் ஆகி அதிலும் விஜயகாந்து வெற்றி பெற்றார். 

1993 ஆம் ஆண்டு விஜயகாந்தின் "கோயில் காளை" படமும் சரத்குமாரின் "ஆதித்யன்" திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது இதிலும் விஜயகாந்த் அவர்களே வென்றார். அதேபோல விஜயகாந்தின் "உளவுத்துறை"மற்றும் சரத்குமாரின் "ஐ லவ் இந்தியா" ஆகிய திரைப்படங்கள் 1993 ஆம் ஆண்டு வெளியானது இதிலும் மீண்டும் வெற்றி பெற்றது விஜயகாந்த் தான். 

அதேபோல சரத்குமாரின் "கட்டபொம்மன்" திரைப்படமும் விஜயகாந்தின் "எங்கள் முதலாளி" திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. பல ஆண்டுகள் கழித்து சரத்குமார் இந்த போட்டியில் வென்றார். அதேபோல 1994 ஆம் ஆண்டு விஜயகாந்தின் "ஹானஸ்ட்ராஜ்" திரைப்படம் சரத்குமாரின் "இந்து" படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது இந்த போட்டியில் மீண்டும் வெற்றி பெற்றது விஜயகாந்த் தான். 

அதே ஆண்டில் விஜயகாந்தின் "என் ஆசை மச்சான்" திரைப்படமும் சரத்குமார் நடிப்பில் வந்த "கில்லாடி மாப்பிள்ளை" படம் ரிலீசானது இதிலும் வெற்றி பெற்றது விஜயகாந்த் அவர்களே. அதே ஆண்டு விஜயகாந்தின் "பெரிய மருது" திரைப்படம் வெளியான நாளில் சரத்குமாரின் "நாட்டாமை" படம் வெளியானது. சரத்குமாருக்கு இது முதல் 200வது நாள் வெற்றி விழா படமாக மாறி சரத்குமார் வெற்றி பெற்றார். 

அதேபோல 1996 ஆம் ஆண்டு விஜயகாந்தின் "அலெக்சாண்டர்" மற்றும் சரத்குமாருக்கு "நேதாஜி" என்கின்ற திரைப்படம் வெளியானது இதில் வெற்றி பெற்றது மீண்டும் விஜயகாந்த் அவர்களே. 1998 ஆம் ஆண்டு விஜயகாந்த் "உளவுத்துறை" திரைப்படம் சரத்குமாருக்கு "மூவேந்தர்" திரைப்படம் வெளியானது இந்த இரண்டு திரைப்படங்களும் வசூலில் ஒரே விதமான வெற்றியை பெற்றது.

அதே ஆண்டில் சரத்குமாருக்கு "நட்புக்காக" திரைப்படம் விஜயகாந்தின் "தர்மா" திரைப்படம் ரிலீஸ் ஆனது இதில் சரத்குமார் தான் வெற்றி பெற்றார். அதேபோல விஜயகாந்தின் "வீரம் வெளஞ்ச மண்ணு" திரைப்படம் சரத்குமாரின் "சிம்மராசி" என்கின்ற திரைப்படம் ஒரே நாளில் வெளியாகி விஜயகாந்த் மீண்டும் வெற்றி பெற்றார். 

2004 ஆம் ஆண்டு விஜயகாந்தின் "நெறஞ்ச மனசு" திரைப்படமும் சரத்குமாரின் "சத்ரபதி" என்கின்ற திரைப்படம் ஒரே நாளில் வெளியானது இந்த இரண்டு திரைப்படங்களின் பெரிய அளவில் போகாமல் பிளாப் ஆனது. 2006 ஆம் ஆண்டு விஜயகாந்த் "தர்மபுரி" திரைப்படமும் சரத்குமாரின் "தலைமான்" என்கின்ற திரைப்படம் வெளியானது. இதில் விஜயகாந்த் திரைப்படத்தை விட சரத்குமாரின் படம் சில லட்சங்களை அதிகமாக வசூல் செய்து வெற்றி  படமாக மாறியது.

மேடையில் பாடிக்கொண்டிருந்த அனிருத்.. சட்டென கையில் கிடைத்ததை அவர் மேல் வீசிய ரசிகர்கள் - அவர் ரியாக்ஷன் என்ன?

Follow Us:
Download App:
  • android
  • ios