MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சொத்தை பிரிக்க முடிவெடுத்த அபிராமி... அபேஸ் பண்ண காத்திருக்கும் ரியா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

சொத்தை பிரிக்க முடிவெடுத்த அபிராமி... அபேஸ் பண்ண காத்திருக்கும் ரியா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ராஜேஸ்வரி கைது செய்யப்பட அபிராமி கண் விழித்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

2 Min read
Author : Ganesh A
Published : Apr 11 2024, 03:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karthigai deepam serial

Karthigai deepam serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜேஸ்வரி கைது செய்யப்பட அபிராமி கண் விழித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ஹாஸ்பிட்டல் வந்த கார்த்திக் ஏன் மா இப்படி பண்ணீங்க என்று சொல்ல, அபிராமி கார்த்திக்கிடம் சாரி கேட்கிறாள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Zee Tamil Karthigai deepam serial

Zee Tamil Karthigai deepam serial

இதனையடுத்து அபிராமி கண் திறந்த விஷயம் அறிந்து தீபாவும் மீனாட்சியும் அபிராமியை வீட்டுக்கு அழைத்து வருவதால் வீட்டை அலங்கரிக்கும் வேலையில் இறங்குகின்றனர். மீனாட்சி அத்தை நல்லபடியா வீட்டுற்கு வந்தா கோவிலுக்கு வர்றதா வேண்டிட்டு இருந்தேன், நான் போய் என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிட்டு வரேன் என்று கிளம்பி செல்கிறாள். அபிராமியை வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். தீபா ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து செல்கிறாள். 

இதையும் படியுங்கள்... அதகளமான புத்தம் புது திரைப்படங்கள்... டிவியில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் என்னென்ன? முழு விவரம் இதோ

34
Karthigai deepam serial Update

Karthigai deepam serial Update

தீபாவை பார்த்த அபிராமி உன்னை பத்தி நான் முழுசா புரிஞ்சிக்கிட்டேன். நானே தேடி இருந்தால் கூட உன்னை மாதிரி ஒரு பெண்ணை கார்த்திக்கு கட்டி வச்சிருக்க முடியாது. அவனுக்கு ஏற்ற பொண்ணு நீ தான் என்று சொன்னதும் தீபா சந்தோசப்படுகிறாள். அடுத்து மீனாட்சி வீட்டிற்கு வர, அபிராமி அவளை பார்த்து உன் வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன் என்று கண் கலங்க மீனாட்சி என்னைக்கும் நீங்க தான் என் அத்தை என்று சொல்ல, அபிராமி நீ தான் என் மருமகள். ஆனால் உனக்கு என்ன பண்ண போறேன்னு தெரியல என்று கண் கலங்குகிறாள்.

44
Karthigai deepam serial Today Episode

Karthigai deepam serial Today Episode

பிறகு ஆனந்த் நான் சொத்தை பிரிக்க சொன்னதால் தான் வீட்டை விட்டு வெளியே போனீங்களா என்று கேட்க, அபிராமி நீ கேட்டதிலும் தப்பு இல்ல, நான் போனதிலும் தப்பு இல்ல. நான் ஒரு நல்ல முடிவோட தான் திரும்பி வந்திருக்கேன், நாளைக்கு லாயரை வர சொல்லி இருக்கேன் என்று சொல்கிறாள். அடுத்து ரியா ஆனந்திடம் என்ன கேட்க போறீங்க என்று ஏற்றி விட, அவன் காஸ்மெட்டிக் கம்பெனி, இந்த வீடெல்லாம் எனக்கு வேண்டும் என்று சொல்கிறான். 

மறுபக்கம் ஐஸ்வர்யா அருணிடம் நமக்கு கம்பெனி எல்லாம் வேண்டாம், ரிசார்ட் இருக்குல அது போதும். ஆனால் இந்த வீடு நமக்கு வரணும். நீங்க கேட்கலனாலும் நான் கேட்பேன் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... Anna serial : தண்ணி கேட்டது குத்தமா... அரிவாளை காட்டி முத்துப்பாண்டியை அலறவிட்ட இசக்கி - அண்ணா சீரியல் அப்டேட்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved