MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Anna serial : தண்ணி கேட்டது குத்தமா... அரிவாளை காட்டி முத்துப்பாண்டியை அலறவிட்ட இசக்கி - அண்ணா சீரியல் அப்டேட்

Anna serial : தண்ணி கேட்டது குத்தமா... அரிவாளை காட்டி முத்துப்பாண்டியை அலறவிட்ட இசக்கி - அண்ணா சீரியல் அப்டேட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி முத்துபாண்டியை பார்த்து உங்களுக்கு என் அண்ணன் கிட்ட தோற்று போறதே வேலையா போச்சு என்று சொல்லி அவமானப்படுத்திய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 11 2024, 03:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anna Serial

Anna Serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி முத்துபாண்டியை பார்த்து உங்களுக்கு என் அண்ணன் கிட்ட தோத்து போறதே வேலையா போச்சு என்று சொல்லி அவமானப்படுத்திய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, இசக்கி தூங்கி கொண்டிருக்கும் நேரத்தில் முத்துப்பாண்டி எழுந்து அவளை காலால் எட்டி உடைத்து போய் தண்ணி எடுத்துட்டு வா என்று சொல்ல அவள் உங்களுக்கு தானே தாகமா இருக்கு, போய் எடுத்துக்கோங்க என்று சொல்ல, முத்துப்பாண்டி மீண்டும் அவளை எட்டி உதைக்க இசக்கி தலையணைக்கு கீழே இருந்து அரிவாளை எடுத்து காட்ட, அவன் அலண்டு போகிறான். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Zee Tamil Anna Serial

Zee Tamil Anna Serial

தண்ணீ தானடி கேட்டேன், அதுக்கு எதுக்கு அருவாளை நீட்டுற என்று கேட்க, இனிமே அப்படி தான் என்று சொல்கிறாள், உங்களுக்கு தாகம் எடுத்தா நீங்க போய் எடுத்து குடிங்க என்று சொல்ல, அவன் நானே எடுத்துக்கறேன் என்று எழுந்து வெளியே வருகிறான். மறுபக்கம் சௌந்தரபாண்டியும் இரும்பி விட்டு பாக்கியத்தை தண்ணீர் எடுத்துட்டு வர சொல்கிறார். 

பாக்கியமும் இசக்கியை போல நீங்களே போய் எடுத்து குடிங்க என்று சொல்கிறாள், உடனே சௌந்தரபாண்டி அதட்டி கேட்க பாக்கியமும் அடங்காமல் அதட்டி பதிலை சொல்ல சரி டி நீ தூங்கு நானே எடுத்துக்கறேன் என்று சொல்லி வெளிய வருகிறார். 

இதையும் படியுங்கள்... Archana Love: பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் லவ்வர் இந்த சீரியல் ஹீரோவா? காட்டுத்தீ போல் பரவும் போட்டோ

34
Anna Serial Update

Anna Serial Update

மறுநாள் காலையில் முத்துபாண்டியை இசக்கியை ஷூவுக்கு பாலிஸ் போட சொல்ல, அவள் பாலிஷ் தானே போடணும், போட்டுடலாம் என்று சிரித்து கொண்டே சொல்ல முத்துபாண்டிக்கு பிளாஷ் கட் நியாபகம் வந்து நானே போட்டுக்கறேன் என்று சொல்கிறான். 

அடுத்து பஞ்சாயத்து கூட முத்துபாண்டியும் அங்கு வந்து விட, ஷண்முகம் என்ன பிரச்சனை என்று விசாரிக்க, மண்ணெண்ணெய் ஊறி கொளுத்திக்கொள்ள பார்த்தவன் என் பொண்டாடி என் கூட வாழ மாட்டேன்னு சொல்றா, சேர்த்து வையுங்க என்று ஷண்முகம் அந்த பெண்ணிடம் பேச, அவள் அவர் என்னை நெறைய கொடுமை படுத்திட்டாரு என்னால் வாழ முடியாது என்று சொன்னதும் அந்த நபர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க, அவளும் மன்னித்து விடுகிறாள். 

44
Anna Serial Today Episode

Anna Serial Today Episode

இந்த நேரத்தில் அங்கு வரும் சௌந்தரபாண்டி ஊருக்கு தான் உபதேசம், இவனுக்கு இல்ல, இவனுக்கும் என் பொண்ணுக்கும் எப்படி கல்யாணம் நடந்தது என்று ஊருக்கே தெரியும், என் பொண்ணு இவன் கூட சந்தோசமாக வாழல என்று பிரச்சனை செய்ய, ஷண்முகம் நாங்க சந்தோசமாக தான் வாழறோம் என்று பதில் சொல்ல, அதை நீ சொல்லாத, என் பொண்ணு சொல்லட்டும் என்று சொல்கிறார். 

பிறகு சனியனை அனுப்பி பரணியை கூப்பிட்டு வர சொல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... அதகளமான புத்தம் புது திரைப்படங்கள்... டிவியில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் என்னென்ன? முழு விவரம் இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved