Asianet News TamilAsianet News Tamil

அண்ணன் பாலய்யா.. பாலகிருஷ்ணாவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நந்தமுரி பாலகிருஷ்ணாவிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலகிருஷ்ணாவின் சாதனைகளை பாராட்டி, அவருக்கு மன அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை வேண்டி ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

SuperStar Rajinikanth Wishes Nandamuri Balakrishna To Complete 50yrs In Cinema Industry-rag
Author
First Published Sep 1, 2024, 11:19 AM IST | Last Updated Sep 1, 2024, 11:19 AM IST

இந்திய திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில், சமீபத்தில் தனது நண்பரான நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு வாழ்த்துதெரிவித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஐந்து தசாப்தங்களாக சினிமாவில் நந்தமுரி பாலகிருஷ்ணா செய்த பங்களிப்புகள் மற்றும் சாதனைகளுக்காக பாராட்டினார். 

நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு தனது எக்ஸ் ஹேண்டில் வாழ்த்து தெரிவித்து, பதிவினை வெளியிட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதில், “ஆக்‌ஷன் கிங், கலெக்‌ஷன் கிங், டயலாக் டெலிவரி கிங்! என் அருமை அண்ணன் பாலய்யா சினிமா துறையில் 50 வருடங்களை நிறைவு செய்து இன்னும் வலுவாக இருக்கிறார். இது ஒரு பெரிய சாதனை! அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவருக்கு மன அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி அமைய கடவுளை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

SuperStar Rajinikanth Wishes Nandamuri Balakrishna To Complete 50yrs In Cinema Industry-rag

பாலய்யாவின் நடிப்புப் பயணம் 1974 இல் டாட்டம்மா காலா திரைப்படத்தில் தொடங்கியது, அங்கு அவர் தனது தந்தையும் பழம்பெரும் நடிகருமான என்.டி.ராமராவுடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர்  நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்ததை இருவரின் ரசிகர்களும் பாராட்டி கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

ரஜினி,விஜய், பிரபாஸ் இல்லை.. ரூ.3050 கோடி சொத்துக்களை வைத்திருக்கும் நடிகர் யார் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios