ரஜினி, விஜய், பிரபாஸ் இல்லை.. ரூ.3050 கோடி சொத்துக்களை வைத்திருக்கும் நடிகர் யார் தெரியுமா?
தென்னிந்தியாவின் மிகப்பெரிய பணக்கார நடிகர் சல்மான் கான் போன்றவர்களை சொத்து மதிப்பின் அடிப்படையில் மிஞ்சுகிறார். அந்த பணக்கார நடிகர் ரஜினிகாந்த், விஜய் மற்றும் பிரபாஸ் ஆகியோரை விட மிகப்பெரிய பணக்காரர் ஆவார்.
Richest South India Actor
தென்னிந்தியாவின் மிகப்பெரிய பணக்கார நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரபாஸ், விஜய், என்டிஆர் ஆகியோரை முந்தி சுமார் 3050 கோடி சொத்துக்களை உடையவராக இருக்கிறார். யார் அந்த பணக்கார நடிகர் என்று தெரிந்து கொள்ளுங்கள். இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகம் இந்திப் படங்களுக்குப் போட்டியாக மிகப்பெரிய பொருட்செலவில் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்கள்.
Actor Nagarjuna
இதனால்தான் தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் சல்மான் கான் போன்றவர்களை சொத்து மதிப்பின் அடிப்படையில் மிஞ்சுகிறார் அந்த நடிகர். நாகார்ஜுனா என்று அனைவராலும் அழைக்கப்படும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா அக்கினேனி தான் தென்னிந்திய நடிகர்களில் மிகப்பெரிய பணக்காரர் ஆவார். அவரது நிகர சொத்து மதிப்பு $364 மில்லியன் (ரூ. 3050 கோடி) ஆகும். இது அவரை இந்தியாவிலேயே பணக்காரர்களில் ஒருவராக ஆக்கியுள்ளது.
Nagarjuna
நாகார்ஜுனா தனது செல்வத்தை அவர் நடித்த படங்களில் இருந்து மட்டுமல்ல, ரியல் எஸ்டேட், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பிற வணிகங்களில் முதலீடு செய்வதன் மூலம் தனது செல்வத்தை கட்டியெழுப்பி உள்ளார். ஆனால் நாகார்ஜுனா தனது தலைமுறையின் மிக வெற்றிகரமான நடிகரிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறார் என்றும் கூற வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக அந்தப் பெருமை சிரஞ்சீவி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்குச் சேரும்.
Nagarjuna Net Worth
ஆனால் அவர்களின் சொத்து மதிப்பு ரூ.1650 கோடி, ரூ.500 கோடி மற்றும் ரூ.450 கோடிகள் என நாகார்ஜுனாவை விட குறைவாக உள்ளது. தற்போதைய தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ் கூட 300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அவருக்குப் பின்தங்கியுள்ளார். நாகார்ஜுனா ஒரு படத்திற்கு ரூ 25 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். அதுமட்டுமில்லாமல், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பல கோடிகளை வாங்குகிறார். அவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளராகவும் உள்ளார்.
Nagarjuna Akkineni Assets
சொந்தமாக ஒரு ஸ்டுடியோவை வைத்திருக்கிறார். அவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனமான N3 Realty Enterprises இன் தலைவராகவும் உள்ளார். அறிக்கையின்படி, நாகார்ஜுனாவுக்குச் சொந்தமான அனைத்து ரியல் எஸ்டேட் மதிப்பும் சுமார் 800 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. நாகார்ஜுனா சில ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த பொருட்களை வைத்திருக்கிறார். இதில் தனியார் ஜெட் விமானம், ஹைதராபாத்தில் உள்ள அரண்மனை பங்களா, ரூ.40 கோடி மதிப்புள்ள அரை டஜன் சொகுசு கார்கள் என கூறப்படுகிறது.
லோகேஷ் போடும் மாஸ்டர் பிளான்.. கூலி படத்தில் ஒரு மரண மாஸ் கேமியோ - எந்த நடிகர் தெரியுமா?