Asianet News TamilAsianet News Tamil

எம்ஜிஆர் - கலைஞர் மோதல்... ரஜினியிடம் கிடைத்த ரகசிய ஆடியோ டேப் - புயலை கிளப்பிய சூப்பர்ஸ்டார்

‘தமிழ்த்திரை உலகத்தின் பார்வையில் கலைஞர்' என்ற தலைப்பில் முரசொலி இதழில் நடிகர் ரஜினிகாந்த் எழுதிய சிறப்புக் கட்டுரையில் எம்.ஜி.ஆர், கலைஞர் இடையேயான மோதல் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

Superstar Rajinikanth shares about MGR and kalaignar karunanidhi conflict in Murasoli gan
Author
First Published Oct 4, 2023, 10:34 AM IST | Last Updated Oct 4, 2023, 10:34 AM IST

கலைஞர் நூற்றாண்டை ஒட்டி முரசொலி நாளிதழில் ‘தமிழ்த்திரை உலகத்தின் பார்வையில் கலைஞர்' என்ற தலைப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலைஞர் கருணாநிதி பற்றி கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார். அதில் கலைஞர் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ள ரஜினிகாந்த். எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞர் இடையேயான பிரிவு குறித்தும் எழுதி உள்ளார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது : பல நேரங்­க­ளில் நான் அவ­ரு­டன் நெருங்­கிப் பழகி இருக்­கி­றேன். அவர் எந்த ஒரு விஷ­யத்­திற்­கும் நான் அவரை கவனித்து பார்த்­த­தில் எந்த ஒரு முடி­வை­யும் எடுத்­தோமா கவிழ்த்­தோமா என்று எடுக்­க­மாட்­டார். அதற்கு சம்­மந்­தப்­பட்­ட­வர்­க­ளின் பல பேரு­டன் விசா­ரித்து, பேசி, விவாதித்துதான் எந்த ஒரு முடி­வை­யும் எடுப்­பார். அப்­படி இருக்­கும் போது எம்.ஜி.ஆர் அவர்­களை கட்­சி­யில் இருந்து நீக்­கும் முக்­கி­ய­மான முடிவை நிச்­ச­யம் கலை­ஞர் அவர்­கள் பல பேரின் ஆலோ­ச­னை­களை கேட்­டு­தான் எடுத்­தி­ருப்­பார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எனக்கு தெரிந்த ஒரு­வர். அவர் பெயர் கூற இய­லாது. அவர் எனக்கு ஒரு ஆடியோ கேசட்டை கொடுத்து “இதை யாரி­ட­மும் கொடுக்க வேண்­டாம். நீங்­கள் மட்­டும் கேட்டு பிறகு என்­னி­டமே திருப்­பிக்­கொ­டுத்து விடுங்­கள்” என்று கூறி­னார். அது 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அவர்­கள் கட்­சியை விட்டு நீக்­கப்­பட்ட பிறகு அவர்க்­கும் திரு. எஸ்.எஸ். ராஜேந்­தி­ரன் அவர்­க­ளுக்­கும் நடந்த தொலைப்­பேசி உரை­யா­டல் ஆகும்.

அதில் திரு. எஸ்.எஸ்.ஆர். அவர்­கள் “அண்ணே... ஏதோ கெட்ட நேரம் அவ­சர அவ­ச­ர­மாக என்­னென்­னமோ நடந்து விட்­டது. வருங்­கா­லத்­தில் கழகத்திற்கு இத­னால் பெரிய இழப்பு ஏற்­ப­டும். வேறு யாரும் இல்­லா­மல் நீங்­கள் இரு­வர் மட்­டும் ஒரு பொது இடத்­தில் சந்­தித்து மனம் விட்டுப்பேசினால் எல்­லாம் சரி ஆகி­டும். கலை­ஞ­ரி­டம் நான் பேசு­கி­றேன். எனக்­காக இதை செய்­யுங்­கள்” என்று கூறு­வார்.

Superstar Rajinikanth shares about MGR and kalaignar karunanidhi conflict in Murasoli gan

அதற்கு எம்.ஜி.ஆர். அவர்­கள் “இல்லை தம்பி.. என்­னு­டைய விசு­வா­சி­கள் எனக்கு ஆத­ர­வாக போராட்­டங்­கள் செய்து என்­னு­டைய அபி­மா­னி­கள் என்று அடை­யா­ளம் காட்­டிக் கொண்டு விட்­டார்­கள். நான் திரும்பி கட்­சி­யில் சேர்ந்­தால் என்­னு­டைய அபி­மா­னி­களை கட்­சி­யில் உள்­ள­வர்­கள் முந்தைய மாதி­ரிப் பார்க்க மாட்­டார்­கள். அவர்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­து­வார்­கள் அவர்­கள் எல்­லாம் உதி­ரிப்­பூக்­கள் ஆகி­வி­டு­வார்­கள். அவர்களுக்­கா­கவே நான் தனிக்­கட்சி ஆரம்­பிக்க வேண்­டும். எனக்கு வேறு வழி­யில்லை. தப்­பாக நினைத்­துக் ­கொள்­ளாதே” என்று அந்த உரையாடல் முடிந்­தி­ருக்­கும்.

அதன் பின் எம்.ஜி.ஆர். அவர்­கள் அ.தி.மு.க. என்ற கட்­சியை உரு­வாக்­கி­னார். அதன் பின் யார் யார் எம்.ஜி.ஆர். அவர்­கள் கட்­சியை விட்டு நீக்க வேண்­டும் என்று சொன்­னார்­களோ.. அதில் பல பேர் ஒவ்­வொ­ரு­வ­ராக கட்­சி­யி­லி­ருந்து விலகி எம்.ஜி.ஆர். பக்­கம் போனார்­கள். அத­னால் கலை­ஞ­ரின் இத­யம் எவ்­வ­ளவு வேத­னை­யில் துடித்­தி­ருக்­கும்?

எதை­யும் தாங்­கும் இத­யம் என்று அண்ணா இவரை நினைத்து தான் சொன்­னாரோ? எவ்­வ­ளவு வேத­னை­கள், சங்­க­டங்­கள், ஏமாற்­றங்­கள், துரோகங்கள் என அத்­த­னை­யும் தாண்டி தொண்­டர்­க­ளுக்கு அவர் எழு­திய ஆயி­ரக்­க­ணக்­கான கடி­தங்­கள், கட்­டு­ரை­கள், சினி­மா­வில் எழு­திய வச­னங்­கள், அவர் செய்த சுற்­றுப்­ப­ய­ணங்­கள், மேடைப்­பேச்­சு­கள், 13 ஆண்­டு­கள் ஆட்­சி­யில் இல்லை என்­றா­லும் கட்­டுக் கோப்­பாக, ஒரு தனி ஆளாக கட்­சியை வழி நடத்தி மீண்­டும் ஆட்­சிக்கு வந்­தார் என்­றால் அது ஒரு மாபெ­ரும் புரட்சி.

அவ­ரைப்­பற்றி எழு­தி­னால் எழு­திக்­கொண்டே போக­லாம். அவ­ரு­டைய இந்த நூற்­றாண்­டில் அவரை நினைத்து, அவ­ரு­டன் நான் கழித்த எத்தனையோ தரு­ணங்­களை ஞாப­கப்­ப­டுத்தி, அவர் வாழ்ந்த அதே காலத்­தில் நானும் வாழ்­கி­றேன், அவ­ரு­டைய இத­யத்­தில் எனக்­கென்று ஒரு தனி இடம் இருந்­தது. அத­னால்­தான் எந்த ஒரு விழா­வி­லும் என்னை அவர் அரு­கில் அமர வைத்து மகிழ்­வார் என்­பதை நினைக்­கும் பொழுது எனக்கு மிக­வும் பெரு­மை­யாக இருக்­கின்­றது" என ரஜினி அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... கருணாநிதி வசனத்தில் நடிக்க மறுத்தது ஏன்? பல வருட ரகசியத்தை உடைத்து பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios