Superstar Rajinikanth missed the chance to act with Vidyapalan ...
பா.இரஞ்சித், ரஜினியை வைத்து இயக்கும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க நடிகை வித்யா பாலன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு பா.இரஞ்சித், ரஜினியை மீண்டும் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 28-ஆம் தேதி துவங்க இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் கதாநாயகி யார்? என தற்போது வரை உறுதியாகவில்லை.
ரஜினி கதாபாத்திரத்திற்கு பாலிவுட் நடிகை வித்யா பாலன் பொறுத்தமாக இருப்பார் என ரஞ்சித் விரும்பியதால், இது குறித்து படக்குழுவினர் வித்யா பாலன் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ரஜினியுடன் நடிக்க விருப்பம் தெரிவித்த நடிகை வித்யா பாலன் அதற்கான கால்ஷீட்டையும் அளித்தார். ஆனால, குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பை துவங்க முடியாததால், வித்யா பாலன் அளித்த தேதிகள் வீணாகின.
இந்த நிலையில் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் துவங்கப்படுவது உறுதி செய்யப்பட்டு மீண்டும் படக்குழுவினர் வித்யா பாலனை அணுகினர். ஆனால், அந்த தேதிகளை வேறு ஒரு பாலிவுட் படத்திற்கு அளித்துவிட்டதாக வித்யா பாலன் தெரிவித்தார். இதனால், இந்தப் படத்தில் வித்யா பாலன் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
வித்யாபாலன் நடித்திருந்தால், இந்த படத்தின் தரம் எங்கேயே போயிருக்கும் என்பதில் ஐயமில்லை.
இப்போ, வித்யாபாலனுடன் நடிக்கும் வாய்ப்பை ரஜினிகாந்த் இழந்தது தான் மிச்சம்.
