HBDRajinikanth : சூப்பர் ஸ்டார் நாயகனாக அறிமுகமானது தமிழில் இல்லை. ரஜினி யார் இயக்கத்தில் ஹீரோவானார் தெரியுமா?

HBDRajinikanth : அசைக்க முடியாதா சிகரமாக நிற்கும் சூப்பர் ஸ்டார் நடித்த படங்களின் தொகுப்பு....

Superstar Rajinikanth birthday special

கர்நாடக தலைநகரான பெங்களுரில் கடந்த  1950 -ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி மராத்திய குடும்பத்தில் பிறந்தவர் சிவாஜி ராவ் கெய்க்வாட். கன்னட மொழி பின்னனியில் வளர்க்கப்பட்ட இவர் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்த  ராமோஜி ராவ் கெய்க்வாட் என்பவருக்கு 4 பிள்ளைகளில் ஒருவராக பிறந்தார்.

9 வயதில் தாயை இழந்த சிவாஜி ராமகிருஷ்ணா மிஷன், ஆச்சார்யா பாடசாலா உள்ளிட்ட மடப்பள்ளிகளில் தனது பள்ளிக்கல்வியை முடித்த்தார். பள்ளிப்படிப்பில் போது சிறு சிறு நாடகங்களில் நடித்துவந்த சிவாஜி , தந்தையின் ஓய்வுக்கு பிறகு குடும்ப சூழலால் பணிக்கு சென்ற சிவாஜி முதலில் கிடைத்த கூலி வேலைகளை செய்து வந்தார். பின்னர் , பெங்களூரு போக்குவரத்துச் சேவையில் (BTS) பேருந்து நடத்துனராகப் பணி அமர்த்தப்பட்டார் சிவாஜி.

 பின்னர் கன்னட நாடக ஆசிரியர் டோபி முனியப்பா தனது புராண நாடகங்களில் ஒன்றில் நடிக்க சிவாஜிக்கு வாய்ப்பளித்த பிறகு அவர் தொடர்ந்து நாடகங்களில் பங்கேற்றார். அப்போது அங்கு வெளியான ஒரு விளம்பரத்தைப் பார்த்த இவர் புதிதாக உருவாக்கப்பட்ட மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்புப் படிப்பில் சேர ஆசைப்பட்டார்.

ஆனால் அவரது முடிவிற்கு அவரது குடும்பத்தினர் முழுமையாக ஆதரவளிக்கவில்லை என்றாலும்,சிவாஜியின்  நண்பரும் உடன் பணியாளருமான ராஜ் பகதூர் அவரை இந்த நிறுவனத்தில் சேர ஊக்குவித்ததோடு அவருக்கு நிதியுதவியும் செய்தார்.  அவர் மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில்  தங்கியிருந்த காலத்தில், தமிழ் திரைப்பட இயக்குனர் கே. பாலச்சந்தர் அவர்களால் கவனிக்கப்பட்டார் . தமிழ் பேசக் கற்றுக் கொள்ளுமாறு இயக்குனர் அவருக்கு அறிவுறுத்த அந்த பரிந்துரையை ரஜினிகாந்த் விரைவாக பின்பற்றி தமிழ் மொழியில் படிக்க கற்றுக்கொண்டார்.

Superstar Rajinikanth birthday special
 
இதைத்தொடர்ந்து 1975 ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் சிவாஜி.  இதன் பிறகு ரஜிகாந்தாக சிறிய ரோலில் நடிக்க துவங்கி, வில்லன், செகண்ட் ஹீரோ, ஹீரோ என படிப்படியாக வளர்ந்து இன்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார். 

ரஜினி முதல் முதலில் கன்னட படத்தில் தான் ஹீரோவாக நடித்தார். மூன்று சிறுகதைகள் அடிப்படையாகக் கொண்ட கதா சங்கமம் என்னும் படத்தில் "Puttanna Kanagal" என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தில் கல்யாண் குமார், ரஜினிகாந்த் , பி. சரோஜாதேவி , ஆரத்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
இதன்பிறகு 1976-ம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய "அந்துலேனி கதா" என்னும் தெலுங்கு மொழித் திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். அதோடு இதில் கமல்ஹாசன்  சிறிய ரோலில் நடித்திருந்தார். பின்னாளில் இந்த படம் தமிழில் அவள் ஒரு தொடர்கதை  என்னும் பெயரில் வெளியானது.
 

70 களில் ரஜினி நடித்த படங்கள் ...

அபூர்வ ராகங்கள், கதா சங்கமா, அந்துலேனி கதா, மூன்று முடிச்சு, பாலு ஜீனு, அவர்கள்,கவிக்குயில், ரகுபதி ராகவன் ராஜாராம், சிலாக்கம்மா செப்பண்டி, புவனா ஒரு கேள்விக்குறி,ஒண்டு ப்ரேமடா கதே, பதினாறு வயதினிலே    ,சகோதர சவால்,ஆடு புலி ஆட்டம்,காயத்ரி,குங்கும ரக்‌ஷே, ஆறு புஷ்பங்கள்,தொலிரேயி கடிச்சிண்டி,அம்மே கதா,கலாட்டா சம்சாரா,சங்கர் சலீம் சைமன்    ,கில்லாடி கிட்டு,அண்ணாடாமுல சவால்,ஆயிரம் ஜென்மங்கள்    ,மாத்து தப்பாடமக,மாங்குடி மைனர்,பைரவி,இளமை ஊஞ்சலாடுகிறது,சதுரங்கம்,பாவத்தின் சம்பளம்    வணக்கத்திற்குரிய காதலியே, வயசு பிலிச்சண்டி,முள்ளும் மலரும்,இறைவன் கொடுத்த வரம்,தப்பிடா தாளா,தப்பு தாளங்கள்,அவள் அப்படித்தான்,தாய் மீது சத்தியம்,    என் கேள்விக்கு என்ன பதில்,ஜஸ்டிஸ் கோபிநாத், பிரியா, குப்பத்து ராஜாஇத்தரு ஆசத்யுலே, தாயில்லாமல் நானில்லை, அலாவுதீனும் அற்புத விளக்கும், நினைத்தாலே இனிக்கும்,அண்டமைனா அனுபவம், அலாவுதீனும் அற்புத விளக்கும், நான் வாழவைப்பேன், டைகர்,ஆறிலிருந்து அறுபது வரை,அன்னை ஓர் ஆலயம்,அம்மா எவருக்கீனா அம்மா,  உள்ளிட்ட தமிழ், தெலுங்கு மொழிகளில் சுமார் 54 படங்களில் அடித்துள்ளார்.

Superstar Rajinikanth birthday special

80களில் சூப்பர்ஸ்டார் நடித்த படங்கள் ...

பில்லா,நட்சத்திரம், ராம் ராபர்ட் ரகீம், அன்புக்கு நான் அடிமை, காளி, அந்தாரி கிருஷ்ணனுடு, நான் போட்ட சவால், ஜானி, எல்லாம் உன் கைராசி, பொல்லாதவன், முரட்டுக்காளை, தீ, கழுகு, தில்லு முல்லு, கர்ஜனை, நெற்றிக்கண், சந்தோஷ், ராணுவ வீரன், போக்கிரி ராஜா, தனிக்காட்டு ராஜா, ரங்கா, அக்னி சக்தி, நன்றி மீண்டும் வருக , புதுக்கவிதை, எங்கேயோ கேட்ட குரல், மூன்று முகம், ஜான், பாயும் புலி,துடிக்கும் கரங்கள்,அந்த கானூன்,    தாய் வீடு, சிவப்பு சூரியன், உருவங்கள் மாறலாம், ஜீட் ஹமாரி    ராஜூ, டுத்த வாரிசு, தங்க மகன்,     மேரி அடாலட், நான் மகான் அல்ல, தம்பிக்கு எந்த ஊரு, கை கொடுக்கும் கை, அன்புள்ள ரஜினிகாந்த், கங்குவா, நல்லவனுக்கு நல்லவன்,
ஜான், மூன்று முகம்,    நான் சிகப்பு மனிதன்    விஜய்    தமிழ்    சத்யராஜ், அம்பிகா, பாக்யராஜ்,Sumathi    
மஹாகுரு, உன் கண்ணில் நீர் வழிந்தால், ஏக் சவுடாகர், ஸ்ரீ ராகவேந்திரா, பேவஃபாய்    ரன்வீர், Nyayam Mere Cheppall, படிக்காதவன், ஊர்க்காவலன், மனதில் உறுதி வேண்டும், தமச்சா    விக்ரம்,     குரு சிஷ்யன்,     தர்மத்தின் தலைவன்,  சங்கர், ப்ளட்ஸ்டோன், கொடி பறக்குது, ஜாதி ராஜா, சிவா, ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை, கெய்ர் கனூனி, பரஷ்டச்சர், சால் பாஸ்....

Superstar Rajinikanth birthday special

90களில் ரஜினி நடித்த படங்கள்....

பணக்காரன்,    முத்து, அதிசயப் பிறவி,    தர்ம துரை,  பாட்ஷா, நாட்டுக்கு ஒரு நல்லவன், தளபதி, மன்னன்    , அண்ணாமலை, பாண்டியன், எஜமான், உழைப்பாளி, வள்ளி, வீரா, பாட்ஷா, ஆண்டவன்,முத்து, Bhagya Debata        அருணாச்சலம்,    படையப்பா...

Superstar Rajinikanth birthday special

20களில் நடித்த படங்கள்....

புலான்டி, மகாவதார பாபா, பாபா, சந்திரமுகி, சிவாஜி, குசேலன், கதாநாயகுடு, எந்திரன், ரா.வன்    சிட்டி, கோச்சடையான்    கோச்சடையான், ராணா,லிங்கா    ராஜா லிங்கேஸ்வரன், கபாலி, சினிமா வீரன், காலா, சமுத்திரக்கனி, 2.0, அண்ணாத்த...    

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios