பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி உலக அளவில் வெளியாகி இன்றளவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. சுமார் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபல நடிகர் விஷால் மற்றும் நடிப்பு அசுரன் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் நடிகர் விஷால் ஆகிய இருவருக்கும் இந்த திரைப்படம் ஒரு கம் பேக் திரைப்படமாக அமைந்துள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

மாறுபட்ட மூன்று வேடங்களில் நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா இந்த திரைப்படத்தில் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை அபிநயா, ரீத்து வர்மா, தெலுங்கு நடிகர் சுனில், மூத்த தமிழ் திரைப்பட இயக்குனர் செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

அயலான் பட டீசர்.. அக்டோபர் 6ம் தேதி நாள் குறிச்சாச்சு? பக்கவா பிளான் போட்டு களமிறங்கும் சிவகார்த்திகேயன்!

சில தினங்களுக்கு முன்பு மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ஹிந்தி மொழி வெளியிட்டுருக்காக தணிக்கை குழுவிற்கு சுமார் 6.5 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை நடிகர் விஷால் அவர்கள் முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக சில சறுக்கல்களை சந்தித்த ஆதிக் ரவிச்சந்திரனுக்கு இந்த படம் ஒரு மாஸ் ஹிட் கொடுத்துள்ளது என்றால் அது மிகையல்ல.

Scroll to load tweet…

இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், இயக்குனர் ஆதிக்க ரவிச்சந்திரன் அவர்களை தனது இல்லத்திற்கு அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இளம் தலைமுறை இயக்குனர்களை மனதார பாராட்டும் ரஜினிகாந்த் அவர்கள் இந்த ஒரு விஷயத்தினால் தான் சூப்பர் ஸ்டாராக என்றும் நிலைத்து நிற்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் பெருமையோடு கூறி வருகின்றனர்.

Legend Saravanan Net Worth: கேட்டாலே கிறுகிறுன்னு வருதே! லெஜெண்ட் சரவணன் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?