super star rajinikanth wish the aruvi movie team

இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான, அருவி திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வசூல் ரீதியாகவும் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது.

ஆனால் இந்தப் படத்தில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திவரும் நிகழ்ச்சி பற்றி, சற்று மோசமாக விமர்சித்துள்ளதாகக் கூறி ஒரு சில சர்ச்சைகளும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அருவி படத்தைப் பார்த்துவிட்டு படத்தின் இயக்குனர் அருண் பிரபுவை தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார். இதனை அருண் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அருவி திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல விருதுகளை பெற்று, புதுமுக நடிகை அதிதி பாலனுக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.