சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 51 ஆவது, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று காலை அறிவித்தார். இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அவரது ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வந்தனர். மேலும் முதலமைச்சர் எடப்பாடி, மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் போனில் வாழ்த்து கூறியதாகவும் கூறப்பட்டது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 51 ஆவது, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று காலை அறிவித்தார். இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அவரது ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வந்தனர். மேலும் முதலமைச்சர் எடப்பாடி, மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் போனில் வாழ்த்து கூறியதாகவும் கூறப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் ரஜினிகாந்த், இந்த மிக உயரிய விருது கிடைத்ததற்கு, தன்னுடைய நன்றிகளை அறிக்கை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.
அதில்... ""இந்திய திரை உலகின் மிக உயரிய தாதா சாகேப் பால்கே விருது எனக்கு வழங்கிய மத்திய அரசிற்கும், மதிப்பிற்குரிய பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னில் இருந்த நடிப்பு திறமையை கண்டு பிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஓட்டுனராக நண்பன் ராஜ்பகதூருக்கும், வறுமையில் வாடும் போதும் என்னை நடிகனாக பல தியாகங்கள் செய்த என் அண்ணன் திரு.சத்யநாராயணா ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும், என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர் திரு.கே.பாலச்சந்தர் அவர்களுக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான, தமிழ் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள எனது ரசிகப் பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

மேலும் செய்திகள்: நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு..! அடுத்தடுத்து பாதிக்கப்படும் பாலிவுட் பிரபலங்கள்!

என்னை மனமார்ந்து வாழ்த்திய, மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும், மதிப்புக்குரிய எதிர்க்கட்சி தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கும், மத்திய மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலகை நண்பர்களுக்கும் என்னுடைய நலன் நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ்... வளர்க தமிழ் நாடு... ஜெய்ஹிந்த்... என தன்னுடைய அறிக்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். 

மேலும் செய்திகள்: காதலன் பிறந்தநாளில் ஓவர் நெருக்கம் காட்டிய ஸ்ருதி..! வைரலாகும் புகைப்படங்கள்!

இதை தொடர்ந்து சற்று முன்னர், ட்விட்டர் பதிவு மூலமும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்... அதில், " உங்கள் அனைவருடைய, அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி, புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள், எனது திரைப்பட சகோதரத்துவ நண்பர்கள் மற்றும் நண்பர்கள், நலம் விரும்பிகள், ஊடக நண்பர்கள், என்னை வாழ்த்த நேரம் ஒதுக்கிய ஒவ்வொரு நபருக்கும், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள எனது அன்பான ரசிகர்கள், அனைவருக்கும் தன்னுடைய அடி மனதில் இருந்து நன்றிகளை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார். 

ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு தன்னுடைய நன்றிகளை தெரிவித்ததை தொடர்ந்து, மீண்டும் ஒரு முறை தலைவர் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: மீண்டும் நயன்தாரா சர்ச்சையில் சிக்கிய ராதாரவி..! வைரலாகும் வீடியோ..!

Scroll to load tweet…