நடிகர் ராதாரவி பா.ஜ.க செயல்தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் கடந்த ஆண்டு பா.ஜ.கவில் இணைந்தார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்த அவர், 'கொலையுதிர்காலம்' பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அக்கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே தான் தி.மு.கவில் இருந்து விலகியதாக அறிவித்தார் ராதாரவி என்பது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள, சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக கட்சிக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் மட்டும் இன்று, பாஜக கட்சிக்கு ஆதரவாக கௌதமி, நமீதா, நடிகர் கார்த்திக், உள்ளிட்ட பல பிரபலங்கள் இறங்கியுள்ளனர்.

தற்போது இவர் பாஜக பிரச்சார கூட்டத்தில் மீண்டும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத விதத்தில், அதுவும் நயன்தாரா பற்றியே பேசி சிக்கியுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய அவர், நயன்தாரா என்கிற ஒரு நடிகை. அதை பற்றி நான் பேசவே இல்லை. ஆனால் எல்லோரும் பேசிவிட்டேன் என கூறியதால் ஆமான் நான் பேசினேன் என்று நானும் கூறினேன். பெண்ணை பற்றி அவதூறாக பேசிவிட்டேன் என திமுக கட்சியில் இருந்து என்னை தற்காலிகமாக நீக்குவதாக கூறினார்கள். நான் முழுமையாகவே வெளியே போகிறேன் என வந்துவிட்டேன்.

நயன்தாரா என்ன உன் கட்சி  கொள்கை பரப்பு செயலாளாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

முதல்வரின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பேசியது மிகப்பெரிய சர்ச்சைகளை உருவாக்கியுள்ள போதும், திமுக தலைமை அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் நயன்தாரா குறித்து படவிழாவில் பேசியதற்காக ராதாரவி மீது திமுக நடவடிக்கை எடுத்தது குறித்து தற்போது விமர்சனங்கள் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.