ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ''தர்பார்'' படத்திற்கு பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் ''தலைவர் 168'' படத்தில் நடித்து வருகிறார். இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு டி. இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்த படத்தின் கதையில் இருந்து, கதாபாத்திரங்களின் பெயர், யாருக்கு என்ன மாதிரியான ரோல் என்று அனைத்தையுமே படக்குழு பரம ரகசியமாக காத்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குஷ்பூ, மீனா உள்ளிட்டோருடன் செல்ஃபி எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர். 

அப்படித்தான் சமீபத்தில் ''தலைவர் 168'' படத்தில் நடித்து வரும் மீனாவின் கெட்டப் சோசியல் மீடியாவில் வெளியானது. இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ராகுல் சிப்லிகஞ்ச், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ''தலைவர் 168'' ஷூட்டிங் ஸ்பார்ட்டில் சந்தித்துள்ளார். அங்கு ரஜினியுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதை பார்த்த படக்குழுவினர் பயங்கர ஷாக்காகியுள்ளனர். 

இதையும் படிங்க: "நீ எல்லாம் ஆம்பளையாடா".... தர்ஷனை தாறுமாறாக கிழித்த சனம் ஷெட்டி... வைரலாகும் ஆடியோ...!

காரணம் அந்த போட்டோவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ''தலைவர் 168'' லுக்கில் இருந்ததாக கூறப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் ரஜினியின் அந்த போட்டோவை சோசியல் மீடியாவில் தாறுமாறாக ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து ''தலைவர் 168'' படக்குழு, ராகுல் சிப்லிகஞ்ச் செம்ம டோஸ் கொடுத்திருப்பாங்க போல. இதையடுத்து ராகுல் தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருந்த ரஜினியுடனான செல்ஃபியை டெலிட் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.