சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய டப்பிங் பணிகளை தொடங்கியதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெற படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது படக்குழுவை சேர்ந்த சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்றே வந்த போதும், ரத்த அழுத்தமாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன் பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் பங்கேற்றார். அங்கு 1 தொடர்ந்து நடந்த படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினிகாந்த், சென்னை திரும்பினார். அதன் பின்னர் சென்னையில் 10 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்றார். இதனிடையே அண்ணாத்த படக்குழு ஷூட்டிங்கிற்காக மேற்குவங்கம் புறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் கொரோனா சூழ்நிலை காரணமாக சென்னையிலேயே கோகுலம் ஸ்டூடியோவில் செட் அமைக்கப்பட்டும், சில காட்சிகள் பிரபல மால் மற்றும் வேறு சில இடங்களிலும் எடுக்கப்பட்டன. 

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய டப்பிங் பணிகளை தொடங்கியதாக கூறப்படுகிறது. மயிலாப்பூரில் உள்ள டப்பிங் ஸ்டூடியோவில் ரஜினி டப்பிங் செய்து வருவதாக தகவல். அண்ணாத்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.