Rajinikanth About Kalaingar : நேற்று சென்னை கிண்டி பகுதியில் உள்ள அரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மேல் துவங்கிய இந்த நிகழ்ச்சி இரவு சுமார் 10 மணி வரை நடைபெற்றது.
நேற்று சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்தின் காரணமாக இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஜனவரி 6ஆம் தேதி சனிக்கிழமை இந்த விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. கலைஞர் நூற்றாண்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களான சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, கருணாஸ், சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கலைஞருடனான தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
Prabhu Deva: மனைவி குழந்தையோடு.. திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகர் பிரபு தேவா!! வீடியோ!
இந்த நிகழ்ச்சியில் இறுதியாக பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் சுமார் 540 கோடி ரூபாய் முதலீட்டில் நவீன ஃபிலிம் சிட்டி ஒன்று கட்டப்பட உள்ளது என்பதையும் அறிவித்தது திரையுலகினருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தது. இந்த சூழலில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கலைஞர் குறித்து பேசிய பல விஷயங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
அதிலும் குறிப்பாக ஒரு மலரும் நினைவை அவர் நேற்று பகிர்ந்து கொண்டார், அது பின்வருமாறு.. "வழக்கமாக கலைஞர் ஒரு நடிகருடன் இணைந்து அவருடைய படத்தை பார்க்கும் பழக்கத்தை கொண்டிருந்தார். அது ஒரு தேர்தல் நேரம், அப்போது அந்த நடிகர் ஓட்டு போட்டு விட்டு வெளியே வந்த பொழுது, பத்திரிகையாளர்கள் பலர் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்று கேட்க, அவர் இரட்டை இலை என்று சொல்லிவிட்டார்".
அது அன்று மிகப்பெரிய டிரெண்டாகிவிட்டது, அன்று மாலையே அந்த நடிகர் கலைஞருடன் இணைத்து ஒரு படத்தை பார்ப்பதாக இருந்தது. ஆனால் எப்படி போவது என்று தெரியாமல், குளிர் காய்ச்சல் என்று கூறிவிட்டு வீட்டில் இருந்துவிட்டார். ஆனால் அந்த நடிகர் கட்டாயம் வர வேண்டும் என்று கலைஞர் கூறிவிட்டார், வேறு வழியில்லாமல் தியேட்டருக்கு அந்த நடிகர் சென்ற பொழுது, என்ன குளிர் காய்ச்சல் என்று சொன்னிங்கலாம்.. சூரியன் பக்கத்தில் உட்காருங்கள் சரியாகிவிடும் என்றார் கலைஞர். அவரும் அவர் அருகில் அமர்ந்தபடி படம் பார்த்து முடித்தார். அந்த நடிகர் வேறு யாருமல்ல நான்தான்" என்று கூறி அந்த அரங்கை கரவொலியால் அதிரவைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
