சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள், சௌந்தர்யாவிற்கும், கோவை தொழிலதிபர் விசாகனுக்கும் சமீபத்தில் தான் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது. விசாகன் தொழிலதிபர் என்பதையும் தாண்டி நடிகரும் கூட. கதாநாயகனாக நடிக்கவில்லை என்றாலும், குணச்சித்திர வேடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

திருமணத்தை தொடர்ந்து சௌந்தர்யா, அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படம் மற்றும், கணவர் குழந்தையோடு விளையாடி மகிழும் புகைப்படங்களை வெளியிட்டு, தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சௌந்தர்யாவின் கணவர் விசாகன், முன்னணி இயக்குனர் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இவரை சிபாரிசு செய்வது வேறு யாரும் இல்லை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய, 'பேட்ட'  இயக்கிய, கார்த்திக் சுப்புராஜிடம் தான், தன்னுடைய இரண்டாவது மருமகனுக்காக சிபாரிசு செய்து வருகிறார் தலைவர் என கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது. என்னதான் நடக்கிறது என பொறுத்திருந்து, பாப்போம்...!