Super Star Rajinikanth : எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் கடந்த 1978ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ப்ரியா.

இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பிரியா. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஒரு வழக்கறிஞரின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். நடிகை ஸ்ரீதேவி, "பிரியா" என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு வரும் ஆபத்துகளில் இருந்து அவரையும் அவரது காதலனையும் காப்பாற்றும் பொறுப்பு உள்ள ஒரு வழக்கறிஞராக இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். 

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் பல சிங்கப்பூர் வாசிகளும் நடித்திருப்பார்கள். "அக்கறை சீமை அழகினிலே" மற்றும் "ஓ ப்ரியா" உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் ஹிட்டான பாடல்கள். இந்த சூழலில் இப்படத்தில் "சுபத்ரா" என்கின்ற கதாபாத்திரத்தில் ஒரு பெண் நடித்திருப்பார். 

'லால் சலாம்' படத்தின் 21 நாள் ஃபுட்டேஜ் மிஸ்ஸிங்.! பகீர் கிளப்பிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! காரணம் யார்?

இவர் உண்மையிலேயே சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த ஒரு பெண், இவருடைய இயற்பெயர் அஸ்னா ஹமீத். அந்த ஒரு திரைப்படத்தில் நடித்த பிறகு பெரிய அளவில் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தற்பொழுது அவர் குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது. 70 வயதாகும் ஆஸ்னா ஹமீத் அவர்கள் தற்பொழுது சிங்கப்பூரில் வாசனை திரவியங்களை விற்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

View post on Instagram

மலாய் மொழி படங்களிலும் இவர் அவ்வப்போது நடித்து வருகிறாராம், 70 வயதாகும் அவர் தனது MAGIC என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு வருகின்றார்.

அனிருத் குரலில்.. பாலாஜி முருகதாஸ் - காவியா அறிவுமணி கலர் ஃபுல் காம்பினேஷனில் "Aao Killelle" ஆல்பம் பாடல்!