உலகம் முழுவதும் ஒரு கோடியை 15 லட்சத்தை தாண்டிய கொரோனா தொற்று, இந்தியாவில்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 6 லட்சத்து 98 ஆயிரத்து 817 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 ஆயிரத்து 707 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4 லட்சத்து 24 ஆயிரத்து 963 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு நம்பிக்கை அளித்துள்ளனர். 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 2,186 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது.

 

இதையும் படிங்க: காந்த கண்ணழகி சில்க் ஸ்மிதா பற்றி யாரும் அறிந்திடாத தகவல்கள்... இதோ...!

சென்னையில் இதுவரை 42 ஆயிரத்து 309 பேர் கொரோனா தொற்றிலிருந்து முறையாக சிகிச்சை பெற்று மீண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் ஆயிரம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா  தொற்றிலிருந்து மீண்ட மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கு முன்னதாக, பலரும் தனியார் மருத்துவமனைகளில் தீட்டப்படும் பில்லைப் பார்த்து கதறி அழுகின்றனர். இந்நிலையில் சித்தா மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளின் படியும் கொரோனா தொற்றை குணப்படுத்த தமிழக அரசு முயன்று வருகிறது. 

 

இதையும் படிங்க: ஒரே ஒரு போன் கால்.... வெளவெளத்து போன ரஜினிகாந்த்... இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்த கதை தெரியுமா?

அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த வீரபாபு என்ற சித்த மருத்துவர் பல இடங்களில் முகாம்களை அமைத்து கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். பல்வேறு வகையான மூலிகைகளைக் கொண்டு அவர் அளித்து வரும் சித்த மருத்துவ சிகிச்சை கொரோனாவுக்கு நல்ல பலனளித்து வருகிறது. இதனால் வீரபாபுவிடம் சிகிச்சை பெற்ற 550 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 

 

இதையும் படிங்க: இளையராஜா மகனுக்கே இப்படியொரு நிலையா?... மதமாற்றம் வரை யுவனை தள்ளியது இதுதானாம்...!

எங்கு, யார் நல்ல விஷயம் செய்தாலும் முதலில் போன் செய்து பாராட்டுவது நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வழக்கம் இல்லையா?. அதேபோல் தான் வீரபாபுவையும் ரஜினிகாந்த் போன் செய்து பாராட்டியுள்ளார்.  உங்களைப் பற்றிய செய்திகளை தினமும் படித்து வருகிறேன். நல்லது செய்து வருகிறீர்கள். உங்களின் செயல் பிரமிப்பையும், மகிழ்ச்சியையும் தருகிறது. ஊரடங்கு முடிந்த பிறகு உங்களை நேரில் சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.