ஜெயிலர் படத்தில் வரும் அந்த மாஸ் சீன்.. உருவானது இப்படி தான் - இணையத்தை மிரட்டும் கலக்கல் வீடியோ!
Jailer Making Video : ஜெயிலர் திரைப்படம் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது அனைவரும் அறிந்ததே.
தமிழ் சினிமாவிற்கு நல்ல பல படங்களை கொடுத்த நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். உலக அளவில் சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து இந்த திரைப்படம் மாபெரும் சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே.
ஜெயிலர் திரைப்பட வெற்றியை தொடர்ந்து ஞானவேல் இயக்கி வரும் "வேட்டையன்" திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வருகிறார். இந்த திரைப்பட பணிகள் முடிந்த பிறகு ஏப்ரல் மாதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள அவருடைய 171-வது திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் அண்மையில் அவருடைய 172வது திரைப்பட குறித்த தகவலும் வெளியானது, தற்பொழுது அந்த திரைப்படத்தினை நெல்சன் திலீப்குமார் அவர்கள் இயக்க உள்ளதாகவும், அது ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக அமைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் வரும் அந்த ட்ரக் சீன் உருவான விதம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அந்த வீடியோவில், நெல்சன் திலீப் குமார், அந்த காட்சியை விளக்கும் நேரத்தில் அதை ஆச்சரியமாக கேட்டு அவரை பாராட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகின்றது.