சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இந்திய திரை உலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து நடித்து, விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் ஜெய்லர்.
கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், முதல் முறையாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து இயக்கி வெளியிட உள்ள திரைப்படம் தான் ஜெய்லர்.
"டைகர் முத்துவேல் பாண்டியன்", என்ற ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். மேலும் இந்த திரைப்படத்தில் மலையாள திரை உலகை சேர்ந்த மோகன் லால், கன்னட திரை உலகின் சிவராஜ் குமார், தெலுங்கு திரை உலகில் இருந்து சுனில் மற்றும் மூத்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ரப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
காட்டு ராணி இவளோ..! மாளவிகா மோகனன் பிறந்தநாளில் புதிய போஸ்டரை வெளியிட்ட 'தங்கலான்' படக்குழு!
மேலும் பல ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கள் மற்றும் இரண்டாம் சிங்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாம் சிங்கிள் பாடலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அண்மையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பேசிய பல விஷயங்கள் வைரலாக பரவி வருகிறது. ஆகஸ்ட் 10ம் தேதி இந்த திரைப்படம் உலக அளவில் வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.
இந்நிலையில் அதில் ஒரு பகுதியாக நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் ஸ்கொயரில், ஜெயிலர் படத்தின் ட்ரைலர் மற்றும் டீசர் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதை கண்ட அவருடைய ரசிகர்கள் தற்பொழுது அதை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வாழ்ந்த வீட்டை சொந்த செலவில் சீரமைக்கும் மேயர்
