Asianet News TamilAsianet News Tamil

சென்னை வந்த வேகத்தில்... கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

ஹைதராபாத்தில் நடந்து வந்த 'அண்ணாத்த' படப்பிடிப்பை முடிந்து விட்டு , நேற்று சென்னை வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று தன்னுடைய வீட்டில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட புகைப்படத்தை அவரது மகள், சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
Super star rajinikanth get corona vaccine today at home
Author
Chennai, First Published May 13, 2021, 2:51 PM IST

ஹைதராபாத்தில் நடந்து வந்த 'அண்ணாத்த' படப்பிடிப்பை முடிந்து விட்டு , நேற்று சென்னை வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று தன்னுடைய வீட்டில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட புகைப்படத்தை அவரது மகள், சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் தமிழக மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனாவை தடுக்கும் பேராயுதமாக விளங்கி வருகிறது கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள். 18 வயதை கடந்தவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என, மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

Super star rajinikanth get corona vaccine today at home

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பின்னர், 'அண்ணாத்த' படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் முடித்து கொடுத்து விட்டு நேற்றையதினம் தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் ரஜினிகாந்துக்கு, ஆரத்தி எடுத்து லதா ரஜினிகாந்த் வரவேற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

Super star rajinikanth get corona vaccine today at home

தற்போது அச்சுறுத்திவரும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை தன்னுடைய வீட்டிலேயே போட்டுகொண்டுள்ளார் தலைவர் ரஜினிகாந்த். அருகே அவரது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தும் உள்ளார்.  தன்னுடைய தந்தை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு... இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில்.... "தலைவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்த கொரோனா வைரசுக்கு  எதிரான இந்த போரை ஒன்றாக எதிர்த்துப் போராடுவோம். என தெரிவித்துள்ளார்".
 
Follow Us:
Download App:
  • android
  • ios