சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு பின் மீண்டும் காவல் அதிகாரியாக நடித்துள்ள திரைப்படம் 'தர்பார்'. முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இந்த படத்தின் மூலம் கை கோர்த்துள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

'சந்திரமுகி' படத்திற்கு பின் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனால் இந்த படம் மீத எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எக்க சக்கமாய் எகிறியுள்ளது.

படம் ஆரம்பமான நாள் முதலே இந்த படம் பற்றிய, தகவல்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது நாம் அறிந்தது தான்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, டெல்லி, ராஜஸ்தான், உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிலையில், இன்றுடன் படப்பிடிப்பு முடிவடைத்துள்ளதாக பட தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, அடுத்ததாக இந்த படத்தின் ரிலீசுக்கு இப்போதே தயார் ஆகி விட்டனர் ரஜினி ரசிகர்கள். தலைவரின் 'தர்பார்' படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.