South Indian Heroes : கோலிவுட் உலகில் 80களின் துவக்கத்தில் இருந்த அளவிற்கு ஒரு ஆரோக்கியமான போட்டி இப்பொது இல்லை என்பது தான் பல சினிமா ரசிகர்களின் கருத்து. அதற்கு முக்கிய காரணம், ஈகோ இல்லாமல் நடிகர்கள், நடிகைகள் ஒன்றாக வாழ்ந்த காலமது.
அதற்கு சான்றாக அமைந்த ஒரு திரைப்படம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம், கடந்த 1987 ஆம் ஆண்டு மறைந்த பிரபல இயக்குனர், கே. பாலச்சந்திரன் அவர்களுடைய இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் "மனதில் உறுதி வேண்டும்", இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் பிரபல நடிகை சுகாசினி நடித்திருப்பார்.
மேலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களும் நடித்திருப்பார். அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் தான் மறைந்த கலைஞர் சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் முதல் திரைப்படம். ஒரு செவிலியராக தனது குடும்ப பாரத்தை தலையில் சுமக்கும் மிக நேர்த்தியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை சுகாசினி.
அவருடைய வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை கோர்வையே இந்த திரைப்படம். சரி இந்த திரைப்படத்தில் என்ன விசேஷம் என்று பார்க்கும் பொழுது இந்த திரைப்படத்தில் வரும் ஒரு பாடல் அப்பொழுது மிகப் பெரிய அளவில் ஹிட் ஆனது. அதற்கு முக்கிய காரணம் அன்றைய காலகட்டத்தில் புகழில் உச்சத்தில் இருந்த மூன்று முக்கிய நடிகர்கள், இயக்குனர் பாலச்சந்தர் அவர்களுக்காக இந்த திரைப்படத்தில் வரும் ஒரே பாடலில் கேமியோவில் நடித்திருப்பார்கள்.
இந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் நடிகை சுகாசினி தன்னுடைய கணவர் குறித்து பேசிக் கொண்டிருப்பார் அப்பொழுது அவர் எப்படி இருப்பார் என்பதை விவரிக்கும் வகையில் ஒரு பாடல் அமைந்திருக்கும் "வங்காள கடலே" என்கின்ற அந்த பாடல் இன்றளவும் மிக மிக பிரபலமான ஒரு பாடல். இந்த பாடலில் பிரபல நடிகர் சத்யராஜ், கேப்டன் விஜயகாந்த் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய மூவரும் சுகாசினியுடன் நடனம் ஆடுவது போல ஒரு பாடல் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த பாடலுக்கு இன்று தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு, பாலச்சந்தர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த மூன்று நடிகர்களும் ஒரே ஒரு பாடலுக்காக இந்த திரைப்படத்தில் நடித்திருப்பது அக்காலகட்டத்தில் நடிகர் நடிகைகள் எந்த வித ஈகோவும் இல்லாமல் தங்களது பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.
Captain Miller Song: தனுஷ் - சிவராஜ்குமார் ஆட்டத்தில் பட்டையை கிளப்பும் 'கோரனாரு' லிரிக்கல் பாடல்!
