'அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்த பின்னர், தற்போது அமெரிக்காவில் முழு உடல் பரிசோதனை முடிந்து சென்னை உள்ள தன்னுடைய வீட்டில் ஓய்வு எடுத்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

'அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்த பின்னர், தற்போது அமெரிக்காவில் முழு உடல் பரிசோதனை முடிந்து சென்னை உள்ள தன்னுடைய வீட்டில் ஓய்வு எடுத்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மேலும் செய்திகள்: தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு ஏற்பட்ட தீடீர் பிரச்சனை..! மூளைக்கு அருகே செய்யப்படும் அறுவைசிகிச்சை!

இயக்குனர் சிவா இயக்கத்தில், சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்த 'அண்ணாத்த' திரைப்படம் ஷூட்டிங் பணிகள் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலை காரணமாக சற்று தாமதம் ஆனாலும், மே மாதம்... ஒட்டு மொத்த படத்தையும் நடித்து கொடுத்து விட்டு வந்தார். இதை தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ மருத்துவமனையில் சிறப்பு மருந்துவர்கள் குழு ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ததை தொடர்ந்து , ஆண்டு தோறும் அமெரிக்காவிற்கு உடற்பரிசோதனைக்காக சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக செல்லமுடியாத நிலையில், இந்த வருடம் மத்திய அரசின் அனுமதி பெற்று தனி விமானத்தில் அமெரிக்கா சென்றார். உடல்பரிசோதனைகள் சிறப்பாக நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று அதிகாலை 3 :30 மணியளவில் சென்னை வந்தார். அவருக்கு ரசிகர்கள் உட்சாக வரவேற்பு அளித்தனர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் ஓய்வு எடுத்து வரும் நிலையில்... இவர் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாக துவங்கியுள்ளது.

மேலும் செய்திகள்: டைட் உடையில் அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி ஒர்க் - அவுட்..! மிரள வைக்கும் பிக்பாஸ் ஷிவானி...!

இதுக்குறுய்த்து வெளியாகியுள்ள தகவலில், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில்... தலைவர் 169 ஆவது படத்தை நடிக்க உள்ளதாகவும். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் வெளியான போது, படத்தை பார்த்துவிட்டு... இயக்குனரை சூப்பர் ஸ்டார் போன் செய்து வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. எனவே விரைவில் தலைவரின் 169 ஆவது படம் குறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.