சிவகார்த்திகேயன் ஒரு ஒரு படம் வெளிவரும் போதும் அவருடைய வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இவருக்கான ரசிகர்களும் பெருகி கொண்டே இருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தின் வெற்றி விழாவில் மேடையில் அழுதது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த சம்பவம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.

மேலும் இந்த விஷயத்தை இதோடு விடுங்கள், குடும்பத்துடன் உங்களுக்கு பிடித்த இடத்திற்கு சென்று வாருங்கள் என்று ஆறுதல் கூறியிருக்கிறாராம்.

தலைவர் பேச்சை தட்டாமல் செய்வாரா சிவா......