சிறந்த இசை ஞானம், குரல் வளம், திறமை இருந்தும் அதனை எப்படி வெளியுலகிற்கு கொண்டுவருவது என, தெரியாமல் இருக்கும் பலருக்கும் ஒரு பாலமாய் இருந்து வருகிறது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.

கிராமங்களில் உள்ள சாமானிய மக்கள் முதல் வெளிநாடுகளில் வாழும் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தன்னுடைய இசை திறனை வெளிப்படுத்தி, இன்று பின்னணி பாடகர்களான உள்ளனர்.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 6 , நிகழ்ச்சியில்... தம்பதிகளாக கலந்து கொண்டவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி. வேஷ்டி சட்டை, துண்டு, நெத்தியில் பட்டை, என செந்திலும், கண்டாங்கி புடவை, தலை நிறைய பூ, கழுத்து நிறைய நகை, என தமிழர்களின் கலாச்சாரத்தை போற்றும் வகையில் உடைகளில் மட்டும் இன்றி, பாடல்களிலும் நாட்டு புற பாடலை மட்டுமே தேர்வு செய்து பாடினர்.

இதுவே இவர்களுக்கு அதிக ரசிகர்களை பெற்று தருவதற்கான மிக பெரிய பலமாக அமைந்து, செந்தில் கணேஷ் டைட்டில் வின்னராகவும் வழிவகை செய்தது. தற்போது இவர்கள் இருவரும் பல படங்களில்  இணைந்து பின்னனி பாடல்கள் பாடி வருகிறார்கள். மேலும் வெளிநாட்டிலும் கச்சேரிகளில் அமோகமாக நடத்தி வருகின்றனர்.

ஆனால் இவர்கள் பாடுவதில், அதிக இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகள் பயன்படுத்துவதாகவும் , நாட்டுப்புற கலையை கெடுப்பது போல் நடந்து கொள்கிறார்கள் என சமீபத்தில் பிரபல நாட்டு புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மிகவும் கோவமாக கூறியிருந்தார். இவரின் இந்த பேச்சுக்கு பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தனர்.

இது குறித்து, சற்றும் அலட்டி கொள்ளாத செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும்,  இசை நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியா சிக்னிக்கு சென்றுள்ள இடத்தில், இசைக்குழுவினருடன் இணைந்து ராஜலட்சுமியின் பிறந்த நாளை செம்ம மஜாவாக கொண்டாடி  மகிழ்ந்துள்ளனர். 

மேலும், வேஷ்டி சட்டை... சேலை கட்டிய இவர்கள் மெல்ல மெல்ல மாடர்ன் உடைக்கு மாறி வருவது? இவர்களின் இசை ரசிகர்களை அதிர்ச்சியாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.