யார் பாடலையும் சுடவில்லை..! வீடியோ ஆதாரத்தோடு உண்மையை வெளியிட்ட சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ராஜலட்சுமி கோவில் திருவிழா ஒன்றில், தான் எழுதி, பாடிய நாட்டுப்புற பாடலை வேறு ஒருவர் பாடியதாக கூறி பொய் பரப்புரையில் ஈடுபடுவது மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக மதுரமல்லி என்கிற நாட்டுப்புற பாடகி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
super singer rajalakshmi about song controversy

இதுகுறித்து மதுர மல்லி வெளியிட்ட வீடியோவில், "மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது" என்ற பாடலை பாடி அதன் வீடியோவை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே யூடியூபில் வெளியிட்டுள்ளேன் அது இரண்டு கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்மையில் நடந்த கோவில் விழாவில் பாடிய நாட்டுப்புற கலைஞர் ராஜலட்சுமி - செந்தில் கணேஷ் ஜோடி "மாமான்னு கூப்பிட தான் மனசு சொல்லுது" என்கிற பாடலை,  கலைவாணி என்பவர் தான் இயற்றி பாடியதாக கூறியதையும் அது குறித்த ஒரு வீடியோவையும் ஆதாரமாக முன் வைத்தார்.

super singer rajalakshmi about song controversy

இந்த வீடியோ குறித்த சர்ச்சைக்கு தற்போது ராஜலட்சுமி விளக்கம் அளித்துள்ளார். சிவன் கோவில் குடமுழுக்கு விழாவில் அந்த பெண் எழுதி, பாடியது ஒரு சிவன் பாடம் என்றும், அதனை தவறுதலாக எடிட் செய்து போட்டதால் இந்த பிரச்சனை வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் எடிட் செய்யாமல் உள்ள முழு வீடியோவையும் ராஜலட்சுமி வெளியிட்டுள்ளார்.

super singer rajalakshmi about song controversy

இந்த வீடியோ சர்ச்சை குறித்து முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே இந்த வீடியோ வெளியிட்டுள்ளதாக ராஜலட்சுமி கூறியுள்ளார். அதே போல் தான் பாடலை சுட்டதாக குற்றம் சாட்டிய மதுர மல்லிக்கும் இது குறித்து விளக்கம் தெரிவித்ததாக கூறியுள்ளார் ராஜலட்சுமி.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ இதோ...

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios