super singer contestant about her marriage
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் பாடகி பிரகதி. சூப்பர் சிங்கர் ஜூனியரில் குழந்தையாக அறிமுகமாகி இன்று மிகப்பெரிய அளவில் பிரபலமாக வளர்ந்திருக்கும் இவருக்கு என, தனி ரசிகர் கூட்டமே உண்டு. சமீபத்தில் இவரின் திருமணம் குறித்து ஊடகங்களில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
அதில் பிரகதி , தெகிடி மற்றும் சூது கவ்வும் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த நடிகர் அசோக் செல்வனை விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார். என்ற தகவல் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து பிரகதியின் நண்பர் வட்டம் அவரை கேள்விகளால் துளைத்து எடுக்கத்தொடங்கிவிட்டது.
அந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக பிரகதி ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். அதில் ”என் திருமணம் குறித்து செய்தியில் வெளியான தகவல் குறித்து எக்கச்சக்கமான மெசேஜ் எனக்கு வருகிறது. இப்போதைக்கு எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எதுவும் இல்லை. அவ்வாறு ஏதாவது செய்வதாக இருந்தால் நிச்சயம் உங்களுக்கு தெரிவிக்கிறேன்” என அவர் தெரிவித்திருக்கிறார்
