தளபதி விஜய் தற்போது நடித்து வரும் 63 வது படத்தின் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் அட்லி இயக்கத்தில், 'தெறி', 'மெர்சல்', படங்களைத் தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள 63 ஆவது படத்தின் படப்பிடிப்பு, தற்போது படுவேகமாக சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், நடிகர் யோகி பாபு, ஆனந்த்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், விஜய் ரசிகர்கள் அவரை ஆரவாரத்தோடு வரவேற்கும் காட்சிகள் அவ்வப்போது வெளியாகி, விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில், இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.