sunny leyone new car
பாலிவுட் திரையுலகம் மட்டும் இன்றி, கோலிவுட் ரசிகர்களையும் தன்னுடைய கவர்ச்சியால் கிறங்கடித்தவர் சன்னி லியோன். இவர் படங்களில் நடிப்பது மட்டுமின்றி ரியாலிட்டி ஷோக்கள், வெப் சீரிஸ் என பலவற்றிலும் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார்.
கார் பிரியையான இவருக்கு Maserati கார் என்றால் கொள்ளைப் பிரியமாம். இதனால், சமீபத்தில் வெளிவந்த புதிய கிபிலி நெரிசியோமோ என்ற காரை சன்னி அமெரிக்காவில் இருந்து ஆர்டர் செய்து வாங்கியுள்ளாராம்.

இந்தக் காரின் விலை ரூ 1.36 கோடியாம்! இந்தக் கார் இன்னும் இந்தியாவில் அறிமுகப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த காருடன் நின்று போட்டோ எடுத்து அதை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் சன்னி லியோன்.
