sunny leyone cry for bio graphy movie

பாலிவுட் கவர்ச்சி கன்னி, சன்னிலியோன், தற்போது தமிழில் சரித்திர படமான 'வீரமாதேவி' படத்தில் நடித்து வருகிறார். மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தை இயக்குனர் வடிவுடையான் இயக்கி வருகிறார். இவருடைய இயக்கத்தில் விரைவில் பரத், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்த 'பொட்டு' திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் சன்னிலியோன் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்படம் ஒன்று அவரது அனுமதியின் பேரில் கடந்த சில மாதங்களாக தயாராகி வந்தது.

சில தினங்களுக்கு முன்பு படக்குழுவினர் சன்னிலியோனுக்கு இந்த படத்தை பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளனர். இந்தப்படத்தை பார்த்து, சன்னிலியோன் தான் செய்த தவறை நினைத்து இரவு முழுவதும், 1000 முறை இதயம் நொறுங்கி கதறி அழுததாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்த ஆவணப்படத்தில் சன்னிலியோன் சிறுவயது சம்பவங்கள், ஆபாச நடிகையாக மாறிய சூழ்நிலை, குடும்பம் உள்பட அனைத்து சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

Scroll to load tweet…