இந்த வருடம் விஷால் நடிப்பில் வெளியான 'இரும்புத்திரை' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தாலும், இந்த படத்தை தொடர்ந்து வெளியான 'சண்டக்கோழி 2'  படுதோல்வி அடைந்தது. 

அடுத்ததாக 'அயோக்யா' என்ற படத்தில் நடித்து வருகிறார்  விஷால். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக  ராஷி கண்ணா நடிக்கிறார். மேலும்  பார்த்திபன், கே.எஸ்ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வெங்கட்மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இவர் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுவார் என தெரிகிறது.

சன்னிலியோன் ஏற்கனவே தமிழில் உருவாகி வரும் 'வீரமாதேவி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கிங் போது சன்னி லியோனிடம் 'அயோக்கியா' படத்தில் நடிக்க அணுகிய போது சன்னி ஒரு பாடலுக்கு நடனமாக ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. எப்படியோ படக்குழுவினர் ஸ்கெட்ச் போட்டு சன்னியை கமிட் செய்து விட்டனர்.