தேர்தல் நெருங்க நெருங்க, பிரபலங்கள் மற்றும் அவர்களுடைய வாரிசுகள், தொடர்ந்து பல்வேறு கட்சியில் இணைந்து வருகிறார்கள். 

அந்த வகையில், பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகரான தர்மேந்திராவின் மகனும் பாலிவுட் நடிகருமான சன்னி தியோல் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். 

சமீபத்தில் சந்நிதியோல் , பாஜக தலைவர் அமித்ஷாவை நேரில் சென்று சந்தித்தார். இதை தொடர்ந்து தற்போது அவர் பாஜக கட்சியில் இணைந்துள்ளார். 

மேலும் இவர் அமிர்தசரஸ் தொகுதியில் வேட்பாளராக இவரை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் தர்மேந்திராவின் இரண்டாவது மனைவி, நடிகை ஹேமாமாலினி  மதுரா தொகுதியில் பாஜக கட்சி சார்பில் போட்டியிடும் நிலையில், சன்னி தியோல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால்... ஒரு குடும்பத்தில் இருந்து இருவர் போட்டியிட நேரும் என்பது குறிப்பிடத்தக்கது.