விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அணைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே போல், இது போன்ற சீரியல்களில் நாயகன், நாயகியாக நடிக்கும் பிரபலங்களும் சீக்கிரமே மிகவும் பாப்புலர் ஆகி வெள்ளித்திரையில் கூட மின்னும் வாய்ப்புகள் அவர்களை தேடி வருகிறது.

அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட சீரியல்களில் ஒன்று 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்'. பொறுப்பில்லாமல் அரசியல் என சுற்றி திரியும் நாயகன், பிடிக்காத பெண்ணை, பல்வேறு சண்டைகளுக்கு பின் காதலித்து திருமணம் செய்து கொண்டு பின் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை! கதறி அழும் பெற்றோர்!

இந்நிலையில் இந்த சீரியல் நாயகன் திடீர் என திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். வயலூரில் உள்ள ஒரு கோவிலில், மிகவும் எளிமையாக இவர்களுடைய திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இவர்களது திருமணத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது காதல் திருமணமா அல்ல பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணமா என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இவர்களின் திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாக, ரசிகர்கள் பலர் தொடர்ந்து இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.