23 வயது சீரியல் நடிகை சுபர்ணா ஜாஷ், அவருடைய அறையில் திடீர் என ஞாயிற்று கிழமை அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த நடிகை சுபர்ணா ஜாஷ், சில பெங்காலி சீரியல்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சில வாரங்களாகவே மன அழுத்ததோடு காணப்பட்டதாக கூறப்படுகிறது.

தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்த இவர், ஞாயிற்று கிழமை அன்று உறங்குவதற்காக தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார். பின் வெகு நேரமாகியும் கதவை திறக்கத்தால் அவருடைய பெற்றோர் கதவை தட்டி பார்த்தனர். பின் கதவை உடைத்து பார்த்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து.

அவரை உடனடியாக பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, சுபர்ணாவின் உடலை போலீசார் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து, இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

23 வயது இளம் சீரியல் நடிகை திடீர் என தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவருடைய பெற்றோர் கதறி அழுதது பலர்பவர்கள் கண்களையே குளமாகியது.