அரண்மனை , அரண்மனை 2 , முத்தின கத்திரிக்காய் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் முன்னனி இயக்குனர் சுந்தர் .சி இவர் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 'சங்கமித்ரா' என்கிற திரைப்படத்தை இயக்க போவதாக கூறி இருந்தார். 

சுந்தர் சியின் கனவுப்படமான இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் கதாநாயகனாக நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது இந்தப்படத்தில் கதாநாயகியாக உலகநாயகன் மகள், நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நாயகியாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே முதல் பல முன்னணி நடிகைகளை பரிசீலித்து வந்த நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆனால் இந்த படத்தில் இரண்டு நாயகர்கள் நடிக்கும் நிலையில் இவர் யாருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாக வில்லன்.